தமிழ்நாடு

கரூரில் 'ஏசி' டவுன் பஸ்கள் இயக்கம்: இந்த வாரம் பயணிகள் சேவைக்கு வருகிறது

Added : பிப் 10, 2020
Advertisement

கரூர்: சென்னை அடுத்து, கரூரில் ஏ.சி., டவுன் பஸ்கள், இந்த வாரம் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் நகர, புறநகர், எக்ஸ்பிரஸ், அல்ட்ரா டீலக்ஸ், ஏ.சி., என, 21 ஆயிரத்து, 542 பஸ்கள் இயக்கப்படுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில், 5,000 புதிய பஸ்கள் பயன்பாட்டு வந்துள்ளன. கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்த, 2,000 பஸ்கள் மக்கள் சேவைக்கு வந்து கொண்டு இருக்கிறது. பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், அனைத்து வசதிகளுடனும் கூடிய பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதில், படுக்கை வசதியுடன் கூடிய பஸ்கள், குறைந்த தூரத்தில் இயங்கக்கூடிய குளிர்சாதன வசதி கொண்ட (ஏ.சி.,) பஸ்கள், முதியவர்களும், உடல்நலக் குறைபாடுடையவர்களும், மாற்றுத் திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில், கழிவறையுடன் கூடிய பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது, சென்னைக்கு அடுத்து ஏ.சி., டவுன் பஸ்கள் கரூரில் இயக்கப்பட உள்ளன.

இது குறித்து, போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், சென்னையில் குளிர்சாதனத்துடன் கூடிய, 20 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு உள்ளது. மேலும், சென்னை, கோவை, மதுரை, திருச்சி மாநகராட்சிகளில் மின்சார பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மற்ற நகரங்களில் ஏ.சி., டவுன் பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, சென்னை அடுத்து கரூரில், இரண்டு ஏ.சி., டவுன் பஸ்கள் இயக்கப்படவுள்ளன. எந்த வழித்தடம் என்பது குறித்து, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும். இந்த வாரம் மக்கள் பயன்பாட்டு வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X