பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : பிப் 10, 2020
Advertisement

புதிய தார்ச்சாலை அமைக்கணும்: கரூர் எஸ். வெள்ளாளப்பட்டியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனால், அந்த பகுதியில், பெரும்பாலான சாலைகள் சேதம் அடைந்துள்ளன. பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாமல், அவதிப்படுகின்றனர். இரவு நேரங்களில், டுவீலர்களில் செல்வோர் தடுமாறி கீழே விழுகின்றனர். வேன், கார் உள்ளிட்ட வாகனங்கள் எளிதாக செல்ல முடியவில்லை. இதனால், புதிதாக தார்ச்சாலை அமைக்க வேண்டும்.
பழுதான கம்பம் மாற்ற வேண்டும்: கரூர் நரிகட்டியூர் பகுதியில், மின்சார கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது, மின் கம்பத்தின் அடிப்பகுதி சேதம் அடைந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும், மின் வாரிய ஊழியர்கள் கண்டு கொள்ளவில்லை. மேலும், பழுதான நிலை யில் உள்ள சிமென்ட் கம்பம், கீழே விழும் பட்சத்தில், பல வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கும் அபாயம் உள்ளது. சிமென்ட் கம்பத்தை உடனடி யாக மாற்ற வேண்டும்.

கழிவு நீர் வெளியேற வடிகால் வசதி தேவை: கரூர், அம்மன் நகர் சாலையில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் குழாய் போடப்பட்டது. தற்போது, குழாய் சேதம் அடைந்துள்ளது. இதனால், பொது மக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும், கழிவு நீர் செல்ல வடிகால்வசதி இல்லை. இதனால், கழிவு நீர் தேங்கியுள்ளது. பொதுமக்கள் குடம், பக்கெட் உள்ளிட்டவற்றை வைத்து, தண்ணீர் பிடிக்க தயங்குகின்றனர். இதனால், வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

பெயர் பலகையை மாற்ற வேண்டும்: கரூர், அம்மன் நகரில், 300 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்த பகுதியில் பெயர்பலகை, பல ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்டது. தற்போது, பலகை பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால், நகரின் பெயர், செல்லும் பாதை குறித்து அறிந்த கொள்ள முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், பழுதான பெயர் பலகையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேங்கிய குப்பை; மக்களுக்கு சிக்கல்: கரூர் அருகே, பசுபதிபாளையம் சாலையில், கடந்த சில நாட்களாக தேங்கிய குப்பை அகற்றப்படாமல் உள்ளது. இதனால், காற்று பலமாக வீசும் குப்பை பறந்த வண்ணம் உள்ளது. மேலும், அந்த பகுதியில் உலா வரும் நாய்கள், குப்பையை சாலை நடுவே இழுத்து போட்டு சென்று விடுகின்றனர். இதனால், பசுபதிபாளையம் சாலை முழுவதும் குப்பையாக காட்சியளிக்கிறது. இதனால், தேங்கிய குப்பையை அகற்ற வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X