பொது செய்தி

தமிழ்நாடு

தார்ச்சாலையாக மாற்ற பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Added : பிப் 10, 2020
Advertisement

கரூர்: கரூரில், மருத்துவக் கல்லூரியை சுற்றியுள்ள பகுதிகளில், தார்ச்சாலை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் அருகே கொளந்தானூரில், 300 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, மருத்துவக் கல்லூரி நடப்பாண்டு முதல் செயல்பட்டு வருகிறது. அதில், 150 மாணவ, மாணவியர் முதலாமாண்டு படித்து வருகின்றனர். மேலும், 30க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பணிபுரிகின்றனர். விரைவில், கரூர் நகரப்பகுதியில் செயல்பட்டு வரும் புறநோயாளிகள் பிரிவு, உள் நோயாளிகள் பிரிவு, மருத்துவக் கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், மருத்துவக் கல்லூரியை சுற்றியுள்ள சாலை, மண் சாலைகளாக உள்ளது. மேலும், அந்த வழியாக வாகனங்கள் சென்று வருவதால், புழுதி பறக்கிறது. இதனால், அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள், வீட்டின் கதவை மூடி வைக்கும் நிலை ஏற்படுகிறது. மழை பெய்தால், மருத்துவக் கல்லூரியை சுற்றியுள்ள சாலைகள், சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. எனவே, மண் சாலைகளை தார்ச்சாலை களாக மாற்ற வேண்டியது அவசியம். மேலும், கல்லூரி வளாகத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, மாணவ, மாணவியர் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X