பொது செய்தி

தமிழ்நாடு

திருச்சி - கரூர் இருவழி சாலையால் விபத்து: நான்கு வழிச்சாலையாக மாற்ற கோரிக்கை

Added : பிப் 10, 2020
Advertisement

கரூர்: திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில், விபத்துகள் அடிக்கடி நடப்பதால் நான்கு வழிச் சாலையாக மாற்ற வேண்டும் என, மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த, 2008ல், கரூர்-திருச்சி இடையே, 82 கி.மீ., தூரத்திற்கு, 516 கோடி ரூபாய் செலவில், தேசிய நெடுஞ்சாலை பணிகள் துவக்கப்பட்டன. இதில் மணவாசி முதல், கரூர் வரை, 22 கி.மீ., நான்கு வழி சாலையாகவும், மற்ற பகுதி இருவழி சாலையாகவும் அமைக்கப்பட்டன. இந்நிலையில் சாலை, மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இச்சாலையை நான்கு வழிச்சாலையாக்க, மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த, 2013 முதல், சாலை, மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ள நிலையில், கரூரில் இருந்து, திருச்சி செல்லும் வாகனங்கள் செல்ல வசதியாக, திருப்பராய்துறை அருகே, புறவழிச் சாலை அமைப்பதாக தெரிவிக்கப்பட்டது. அப்போதைய, மத்திய அரசின் சரியான அணுகுமுறை இல்லாதது மற்றும் நீதிமன்ற வழக்கு போன்றவற்றால் இப்பணி முடிவடையவில்லை. இதனால், கரூரிலிருந்து, திருச்சி செல்லும் கனரக வாகனங்களால், போக்குவரத்து நெரிசல் சிக்கித் தவிக்கிறோம். மேலும், மணவாசியிலிருந்து திருப்பராய்துறை வரை, 41 கி.மீ., இரண்டு வழி சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை வழியாக தினமும், 1,000க்கும் மேற்பட்ட லாரிகள் செல்கின்றன. இட நெருக்கடியில் சாலையில் அடிக்கடி போக்குவரத்து தடைப்படுகிறது. இரவு நேரங்களில் எதிரில் வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில் மீதமுள்ள, 41 கி.மீ., சாலையை, நான்கு வழிச் சாலையாக்க, மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X