பொது செய்தி

தமிழ்நாடு

சமஸ்கிருதம் உண்டு உறைவிடப்பள்ளி; பயிற்சி எடுத்த வெளி மாநிலத்தினர்

Added : பிப் 10, 2020
Advertisement

கிருஷ்ணராயபுரம்: மகாதானபுரம், சமஸ்கிருதம் உண்டு உறைவிடப்பள்ளி வளாகத்தில், பல்வேறு மாநிலங்களில் இருந்து சமஸ்கிருதம் படிப்பதற்காக மாணவர்கள் வருகை தந்துள்ளனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, மகாதானபுரத்தில் சமஸ்கிருதம் உண்டு உறைவிடப்பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளி தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. தற்போது, மற்ற மாநிலங்களில் இருந்து சமஸ்கிருதம் படிக்க மாணவர்கள் வருகை தந்துள்ளனர். பயிற்சியை மகாதானபுரம் ராஜாராம் துவக்கி வைத்தார். பயிற்சியில் படிக்க டில்லி, அமர்நாத், கோவா, மற்றும் மாநிலத்தின் பல பகுதியில் இருந்து, 20 பேர் கலந்து கொண்டனர். பயிற்சி ஐந்து நாட்கள் நடக்கிறது. பயிற்சி நிலைய முதல்வர் கவுரி, சுவாமிஜி, சிவகுமார் ஆகியோர் நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X