மோசமான கிராமச்சாலை; சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

Added : பிப் 10, 2020
Advertisement

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி யூனியனுக்கு உட்பட்ட, சேந்தமங்கலம் மேல்பாகம் பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள, கிராமப்புற சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. செல்லிவலசு பிரிவிலிருந்து, தண்ணீர்பந்தல், வெங்கடாபுரம் வழியாக மார்க்கம்பட்டி செல்லும் தார்ச்சாலை கற்கள் பெயர்ந்த நிலையில் மோசமான நிலையில் உள்ளது. கிராமப்புற சாலை வழியாக, குரும்பபட்டி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மார்க்கம்பட்டி, மூலனூர், தாராபுரம், பழநி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், சாலை மோசமாகி பல மாதங்கள் ஆன நிலையில், சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. இதனால் அவ்வழியில் சென்று வரும் மக்கள், மிகுந்த இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X