பொது செய்தி

தமிழ்நாடு

குளித்தலை கோர்ட்டில் லோக் அதாலத்

Added : பிப் 10, 2020
Advertisement

குளித்தலை: குளித்தலை, ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள நான்கு நீதிமன்றங்களிலும், லோக் அதாலத் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. சப்-கோர்ட் நீதிபதி ஸ்ரீதர் தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஷ், குற்றவியல் நடுவர்கள் தினேஸ்குமார், பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இலவச சட்ட உதவி வக்கீல் செந்தில், சின்னசாமி, வக்கீல் சங்க தலைவர் சாகுல்அமீது மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில், சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், மோட்டார் வாகன விபத்து, காசோலை வழக்குகள், சிறுகுறு குற்ற வழக்குகள் உள்ளிட்ட, 232 வழக்குகள் விசாரணைக்கு ஏற்றுகொள்ளப்பட்டு, அவற்றின் மீது தீர்வு காணப்பட்டது. இதற்கு மூன்று கோடியே, 50 லட்சத்து, 22 ஆயிரத்து, 616 ரூபாய்க்கான பணப்பயன்களை, சப்-கோர்ட் நீதிபதி ஸ்ரீதர் பயனாளிகளுக்கு வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X