தமிழ்நாடு

கரூர்-திண்டுக்கல் வழித்தடம் இரட்டை ரயில் பாதையாக மாற்ற ஒப்புதல்

Added : பிப் 10, 2020
Advertisement

கரூர்: கரூரை மையமாக உள்ள, ரயில்வே வழித்தடங்கள், இரட்டை ரயில்வே பாதையாக மாற்ற, மத்திய பட்ஜெட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் இருந்து, கரூர் வழியாக திருச்சி வரை, ஆங்கிலேயர் காலத்திலும், கரூர்-திண்டுக்கல் வரை கடந்த, 1985, கரூர்-சேலம் வரை கடந்த, 2013 என, ஒற்றை ரயில்வே பாதைகள் அமைக்கப்பட்டன. கடந்த ஓராண்டுக்கு முன்பு வரை, மூன்று ரயில்வே வழித்தடங்களிலும், டீசல் இன்ஜின் இயக்கப்பட்டது. தற்போது, 300 கோடி ரூபாய் செலவில் மின் பாதையாக மாற்றி அமைக்கப்பட்டு, மின்சார இன்ஜின் மூலம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், ஒற்றை வழித்தடமாக உள்ளதால், அதிவேக ரயில்கள் செல்லும்போது, பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் குறிப்பிட்ட ஸ்டேஷன்களில் நிறுத்தப்படும். இதனால், காலதாமதம் ஏற்படுகிறது. இதனால், இரட்டை ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது. இந்நிலையில் கடந்த, 1ல் மத்திய பட்ஜெட்டில் தென்னக ரயில்வே பணிக்கு, 3,340 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், கரூர்-திண்டுக்கல் வரையிலும், கரூர்-சேலம் வரையிலும், ஈரோடு-கரூர் வரையிலும், இரட்டை ரயில்வே பாதைகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ரயில்வே துறை அதிகாரிகள் கூறியதாவது: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு செய்த பிறகு, பூர்வாங்க பணிகள் துவங்கும். மூன்று ரயில்வே பாதைகளிலும், இரட்டை பாதை அமைக்க போதிய இடம் ரயில்வே நிர்வாகத்திடம் உள்ளது. கூடுதல் நிலம் தேவைப்படும் பட்சத்தில், தனியார் நிலம் கையகப்படுத்துவது குறித்து, ரயில்வே வாரியம் முடிவு செய்யும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X