பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் ஊராட்சி தலைவருக்கு திட்ட விளக்க கூட்டம்

Added : பிப் 10, 2020
Advertisement

நாமக்கல்: தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் சார்பில், புதுச்சத்திரம் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான திட்ட விளக்க கூட்டம், நாமக்கல்லில் நடந்தது.
கலெக்டர் மெகராஜ் தலைமை வகித்து பேசியதாவது: தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம், உலக வங்கி நிதியுதவியுடன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் துவங்கப்பட்ட தனித்துவம் வாய்ந்த திட்டம். இத்திட்டம், தமிழகத்தின், 26 மாவட்டங்களில், 120 வட்டாரங்களில், 3,994 கிராம ஊராட்சிகளில், இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், பள்ளிப்பாளையம், புதுச்சத்திரம், மோகனூர் மற்றும் திருச்செங்கோடு ஆகிய, நான்கு ஒன்றியங்களுக்கு உட்பட்ட, 87 கிராம ஊராட்சிகளில், செயல்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக, புதுச்சத்திரம் ஒன்றியத்தில், திட்ட செயல்பாடு துவங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஊரக தொழில் முனைவோரை உருவாக்குதல், அவர்களுக்கு தேவையான நிதி மற்றும் சேவைகளுக்கு வழிவகுத்தல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குதல் ஆகியவை திட்டத்தின் முக்கிய நோக்கம். இத்திட்டத்தில், பகுப்பாய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், மக்கள் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சி திட்டம் தயாரிப்பதற்கான அணி, ஊராட்சி வாரியாக தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் மூலம், தொழில் முனைதலை ஊக்குவிக்கும் வகையில், உற்பத்தியாளர்கள், தொழில் முனைவோர், இளைஞர்கள் மற்றும் சமூகம் சார்ந்த அமைப்புகளிடம் இருந்து தகவல்களை சேகரிக்க உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். ஒன்றியக்குழு தலைவர் ஜெயந்தி, புத்தாக்கத் திட்ட மேலாளர் சாந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X