பொது செய்தி

தமிழ்நாடு

முதுகலை ஆசிரியர் பணியிடம் நிரப்புவதற்கு கலந்தாய்வு: மாவட்டத்தில் 63 பேர் பங்கேற்பு

Added : பிப் 10, 2020
Advertisement

நாமக்கல்: அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு, தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. அதில், தேர்வு செய்யப்பட்ட பணிநாடுனர்களில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பணி நாடுனர்களுக்கு, மாநில முன்னுரிமை முதுநிலை தர எண் அடிப்படையில், பணி நியமன ஆணை வழங்குவதற்கு, கலந்தாய்வு நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நேற்று துவங்கியது. தமிழ், ஆங்கிலம், வணிகவியல், பொருளியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், மனையியல் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை, ஒன்று, ஆகிய காலிப்பணிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா முன்னிலையில் கலந்தாய்வு நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா முன்னிலையில், தமிழ், 25, ஆங்கிலம், 10, வரலாறு, 11, அரசியல் அறிவியல், 4, பொருளியல், 5, வணிகவியல், 3, புவியியல், ஒன்று, உடற்கல்வி இயக்குனர் நிலை, ஒன்று என, மொத்தம், 63 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் அனைவரும் கலந்தாய்வில் கலந்து கொண்டனர். இதையடுத்து, நேற்று துவங்கிய கலந்தாய்வில், காலிப்பணியிடங்களுக்கு, சம்பந்தப்பட்ட பாட முதுகலை ஆசிரியர்கள், முன்னுரிமை அடிப்படையில், உள்ளூர் மாவட்டம் மற்றும் வெளிமாவட்டங்களை தேர்வு செய்தனர். அவ்வாறு தேர்வு செய்தவர்களுக்கு, இன்று (பிப்., 10), நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. வெளி மாவட்டத்தை தேர்வு செய்தவர்களுக்கு, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணி நியமன ஆணை வழங்குவர். இன்று நடக்கும் கலந்தாய்வில், கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், உயிர் வேதியியல், நுண்ணுயிரியல் ஆகிய பாடங்களுக்கான, முதுகலை ஆசிரியர்கள், 56 பேர் கலந்து கொள்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X