பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளியில் 42 ஆண்டுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Added : பிப் 10, 2020
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 42 அன்டுகளுக்கு பின், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, தலைமையாசிரியர் ஆடலரசு தலைமையில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,'' 1978ல் எஸ்.எஸ்.எல்.சி., வகுப்பு நிறைவு செய்த ஆண்டு. அதன் பின்தான் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு தொடங்கியது. கல்லூரிகளில் பி.யு.சி., எனப்படும் புகுமுக வகுப்பு, 1979ம் ஆண்டுடன் நிறைவு பெற்றது. 1978ல், 11 ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பை நிறைவு செய்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மிகுந்த மன நிறைவை தருகிறது,'' என்றார். ஒவ்வொருவரும், பள்ளியில் தாங்கள் பயின்ற போது நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்தனர். ஆண்டுக்கு ஒருமுறை, இது போல் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடத்துவது, பள்ளிக்கு தேவையான உதவியை மாணவர்களுடன் கலந்து பேசி நிறைவேற்றி தருவது, இடைப்பட்ட காலங்களில் காலமாகிவிட்ட ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள், உடன் படித்த மாணவர்களுக்கு இரங்கல் தெரிவித்தல், மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பி.டி.ஏ. நிர்வாகி சந்திரசேகரன், விடியல் ஆரம்பம் பிரகாஸ் உள்பட பலர் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X