பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்

Added : பிப் 10, 2020
Share
Advertisement

சாலையில் ஒளிரும் விளக்கு அவசியம்: மல்லசமுத்திரம் ஒன்றியம், காளிப்பட்டியில் இருந்து மகுடஞ்சாவடி செல்லும் சாலை, எட்டு கிலோ மீட்டர் தொலைவு கொண்டது. இச்சாலையில் தினமும் ஏராளமான கனரக, இருசக்கர, இலகுரக வாகனங்கள் செல்கின்றன. இதுவரை சாலையில் ஒளிரும் விளக்கு அமைக்கப்படவில்லை. இதனால், இரவில் செல்லும் வாகனங்கள், போதிய வெளிச்சமின்றி எதிரே வரும் வாகனங்கள் மீது மோதி விபத்துகள் நடந்து வருகிறது. சாலையில் ஒளிரும் விளக்குகள் அமைக்க நடவடிக்கை அவசியம்.
மின்விளக்கின்றி வாரச்சந்தை: மல்லசமுத்திரம் பேரூராட்சியில், பல ஆண்டுகளாக புதன்கிழமையன்று வாரச்சந்தை நடந்து வருகிறது. இதுவரை, சந்தையில் மின்விளக்குகள் ஏதும் அமைக்கப்படவில்லை. இதனால், இரவு நேரங்களில் வியாபாரிகள் பெரிதும் தவித்து வருகின்றனர். வேறு வழியின்றி, வியாபாரிகளே பேட்டரி பொருத்திய டார்ச் விளக்கை வைத்துக் கொண்டு வியாபாரம் செய்கின்றனர். அதுமட்டுமின்றி, வயதானவர்கள் இருட்டில் நடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

திறந்தவெளி கிணறு; காத்திருக்கு ஆபத்து: எலச்சிபாளையம் ஒன்றியம், எளையாம்பாளையம் அங்கன்வாடிமையம் அருகே பொது கிணறு, 30 ஆண்டுகளுக்கு முன் தோண்டபட்டது. இதுவரை கிணற்றுக்கு கம்பி வளையம் அமைக்கப்படவில்லை. இங்குள்ள குழந்தைகள் கிணற்றை எட்டி பார்த்தால், தவறி விழ வாய்ப்புள்ளது. ஆடு, கோழி போன்றவைகளும் உள்ளே விழுந்து சிரமத்திற்கு ஆளாகின்றன. எனவே, குழந்தைகளின் நலன் கருதி கிணற்றுக்கு கம்பிவளையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இணைப்பு சாலை சீர்படுத்த வேண்டும்: குமாரபாளையம், சேலம்-கோவை புறவழிச்சாலையில், எதிர்மேடு தனியார் கல்லூரி எதிரில் சர்வீஸ் சாலையில் இருந்து, புறவழிச்சாலை செல்லும் இணைப்பு சாலை கரடு முரடாகவும், பாறைகளாகவும் உள்ளது. இந்த வழியில் வரும் வாகன ஓட்டிகள், நிலை தடுமாறி கீழே விழுந்து பாதிப்புக்கு ஆளாகின்றனர். வயதானவர்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும், இணைப்பு சாலையை புதிய சாலையாக மாற்ற வேண்டும்.

பல்லாங்குழி சாலை; விபத்து அபாயம்: குமாரபாளையம், நாராயண நகர், நகராட்சி நடுநிலைப்பள்ளி பின்புற சாலையில் குடியிருப்பு பகுதிகள், கடைகள் அதிகம் உள்ளன. இங்குள்ள சாலை பல்லாங்குழி போல் குண்டும், குழியுமாக உள்ளது. சாலையில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு, போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுகிறது. அதிக பாரம் ஏற்றி வரும் டெம்போ வேன்கள், லாரி போன்ற வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி கீழே சாயும் நிகழ்வுகள் தொடர்கதையாகி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X