இந்த செய்தியை கேட்க
மும்பை : இந்தியாவில் 2016 ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2000 நோட்டுக்கள், எளிதில் யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு உயர் தரத்தில் கள்ளநோட்டுக்களாக பாக்.,ல் அச்சடிக்கப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.

நேற்று (பிப்.,09) துபாயில் இருந்து மும்பை வந்த விமான பயணியிடம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.24 லட்சம் மதிப்புடைய ரூ.2000 கள்ளநோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 7 முதல் 9 பாதுகாப்பு முறைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே இவை கள்ளநோட்டுக்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிக உயர் தரம் கொண்டதாக இந்த கள்ளநோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. பாக்.,ல் அச்சடிக்கப்பட்ட இந்த கள்ள நோட்டுக்கள், அங்கிருந்து துபாய் கொண்டு செல்லப்பட்டு, பின் இந்தியாவிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

2016 ம் ஆண்டு இந்தியாவில் பணமதிப்பிழப்பு கொண்டு வரப்பட்ட பிறகு ரூ.2000 நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இருப்பினும் 2019 ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவதை நிறுத்தி உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறி இருந்தது. இதனால் அதிக அளவில் ரூ.2000 நோட்டுக்கள் ஒருவரிடம் இருந்ததால் சந்தேகம் அடைந்து விமான நிலைய அதிகாரிகள் சோதனை நடத்திய போது இவை கள்ளநோட்டுக்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் கூறுகையில், இவை கள்ளநோட்டுக்கள் என்பதை சமானியர்களால் கண்டுபிடிக்க முடியாது. இவற்றை கொண்டு வந்த ஜாவித் ஷாயிக் (36) விமான நிலைய பாதுகாப்பை முடித்து விட்டு, பஸ் ஸ்டாப்பிற்கு சென்ற பிறகு அவர் மீது சந்தேகம் எழுந்து, பிடித்தோம். அவருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகிறோம் என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE