திருவிழாவில் வீர குமாரர்கள் கத்தி போட்டு சக்தி அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருவிழாவில் வீர குமாரர்கள் கத்தி போட்டு சக்தி அழைப்பு

Added : பிப் 10, 2020
Share

ராசிபுரம்: திருவிழாவில், வீர குமாரர்கள் கத்தி போட்டு சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. ராசிபுரம், மேட்டுதெருவில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் சக்தி விழா மற்றும் பொங்கல் விழா விமரிசையாக நடப்பது வழக்கம். மூன்று நாட்கள் நடக்கும், திருவிழா கடந்த, 5ல், முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது. நேற்று கத்தி போடும் சேவையுடன் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. ராசிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை செய்து, சுவாமி அழைப்பு துவங்கியது. இதில் கலந்து கொண்ட, 20 சிறுவர்கள் உட்பட, 50க்கும் மேற்பட்ட வீரகுமாரர்கள் கத்தியால், தங்கள் உடம்பை கீறி, வேண்டுதலை நிறைவேற்றினர். சிறுமியர் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். சக்தி அழைத்தல் ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலை அடைந்தது. வழிநெடுகிலும், பக்தர்கள், பூஜை செய்து சக்தி அழைத்தல் ஊர்வலத்தை வரவேற்றனர். மாலை, சிம்ம வாகனத்தில் சவுடேஸ்வரி அம்மன் திருவீதியுலா நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X