பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளவழி கருப்பனார் கோவிலில் விடிய விடிய கறி விருந்து

Added : பிப் 10, 2020
Advertisement

ராசிபுரம்: கள்ளவழி கருப்பனார் கோவிலில், முப்பூஜை விழாவையொட்டி விடிய விடிய கறி விருந்து நடந்தது.
நாமகிரிப்பேட்டை அருகே, ஆர்.புதுப்பட்டியில் கள்ளவழி கருப்பனார் கோவில் உள்ளது. கோவிலில் ஆண்டுதோறும், தை மாதம் கடைசி வார ஞாயிற்றுக்கிழமை முப்பூஜை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு முப்பூஜை திருவிழா நேற்று இரவு விமர்சையாக நடந்தது. விழாவில், கள்ளவழி மலை மேல் இருக்கும் கருப்பனார் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஆடு, கோழி, பன்றிகளை பலியிட்டனர். மேலும் காவு சோறுடன் விசேஷ பூஜை நடந்தது. 200 கிலோ ஆடு, 50 கிலோ கோழி, 600 கிலோ பன்றி கறி ஆகியவற்றை சமைத்தனர். அதேபோல், 500 கிலோ பச்சரிசி கொண்டு சாதம் வடித்து, அதை உருண்டையாக்கி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். பக்தர்களுக்கு விடிய, விடிய அசைவ விருந்து வழங்கப்பட்டது சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, 4,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். மேலும் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பச்சரிசி, ஆடு, கோழி மற்றும் பன்றி ஆகியவற்றை கொண்டு வந்து சுவாமிக்கு பலியிட்டு காணிக்கை செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X