பொது செய்தி

தமிழ்நாடு

சுவை மிகுந்த தேர் மிட்டாய் விற்பனை அமோகம்

Added : பிப் 10, 2020
Advertisement

மல்லசமுத்திரம்: காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், தேர் மிட்டாய் சுவைமிகுந்து காணப்படுவதால், மக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். மல்லசமுத்திரம் அருகே, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், தைப்பூச தேர்திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவில், தேர் மிட்டாய் மிகவும் சிறப்பு பெற்றது. இதை மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இதுகுறித்து, தாரமங்கலத்தை சேர்ந்த வியாபாரி ராஜமாணிக்கம் கூறியதாவது: நாங்கள், நான்கு தலைமுறைகளாக மிட்டாயை விற்பனை செய்து வருகிறோம். ஒரு கிலோ, 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தேங்காய் மற்றும் சர்க்கரை கலந்து இங்கேயே தயாரித்து, உடனுக்குடன் விற்பனை செய்கிறோம். சுவை மிகுதியாக உள்ளதால், மக்கள் ஆர்வமுடன் இந்த மிட்டாயை வாங்கி செல்கின்றனர். கிட்டதட்ட ஒரு மாதம் இக்கோவிலில் வியாபாரம் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X