சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடையாளம் தெரியாத வாகனம் மோதி டிரைவர் பலி

Added : பிப் 10, 2020
Advertisement

எலச்சிபாளையம்: எலச்சிபாளையத்தில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி, டிப்பர் லாரி டிரைவர் உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் அருகே உள்ள, அகரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன், 35. இவர், டிப்பர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு வேலம்மாள், 32, என்ற மனைவி, மற்றும் இரு மகன்கள் உள்ளனர். முருகேசன், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணியளவில், எலச்சிபாளையத்தில் இருந்து, திருச்செங்கோடு செல்லும் சாலையில் அமைந்துள்ள விஸ்வம் டி.வி.எஸ்., ?ஷாரூம் அருகே அவரது டி.வி.எஸ்., 50 இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம், மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, எலச்சிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X