வுஹானில் 50 லட்சம் பேர் மாயம்: கொரோனா பரவும் அச்சம்

Updated : பிப் 10, 2020 | Added : பிப் 10, 2020 | கருத்துகள் (16)
Advertisement

இந்த செய்தியை கேட்க

பீஜிங்: சீனாவின் வுஹான் நகரில் கடந்த டிச., மாத இறுதியில், உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள, 'கொரோனா வைரஸ்' உருவானது. இது எந்த வகையான வைரஸ் எனக் கண்டறிவதற்குள், சில நாட்களிலேயே, பல நுாறு பேரின் உயிரையும் குடித்தது.





இது, 'கொரோனா வைரஸ்' என, மருத்துவர்கள் கண்டறிந்தனர். 'இது பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து, வேகமாக மற்றவர்களுக்கும் தொற்றக் கூடியது. இதனால், பெரும் உயிரிழப்புகள் ஏற்படக் கூடும்' என, சீன சுகாதாரத் துறையினர் அச்சம் தெரிவித்தனர்.இதையடுத்து, வுஹான் நகரில் வசிப்பவர்களிடம் இருந்து, இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க, வுஹானின் எல்லைகளை மூடும் நடவடிக்கையை, கடந்த ஜன., 23ம் தேதி, சீன அரசு மேற்கொண்டது. அதற்குள் இந்த வைரஸ், சீனாவின் பிற பகுதிகளை மட்டுமின்றி, 28 நாடுகளுக்கும் பரவியது.இந்த வைரசால் தற்போது வரை, 904 பேர் உயிரிழந்துள்ளனர்; 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சையில் உள்ளனர் என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.




இந்நிலையில், சீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளதாவது:கொரோனா வைரசை கண்டறிந்தவுடன், அது மேலும் பரவாமல் தடுக்க, வுஹான் நகரின் எல்லைகளை மூடினோம். நகரில் உள்ளவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து வருகிறோம்.3.8 கோடி பேர் வசித்த வுஹானில், 50 லட்சம் பேர் மாயமாகி இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து தப்புவதற்காக, நகரை விட்டு வெளியேறி இருக்கலாம். அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு இருந்தால், அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கும் இந்த வைரஸ் பரவக் கூடும். பெரும் உயிரிழப்புகள் ஏற்படும். எனவே, வுஹானிலிருந்து வெளியேறியவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




வுஹானில் இருந்து வெளியேறிய, 50 லட்சம் பேரால், சீனாவின் பிற பகுதிகளுக்கு மட்டுமின்றி, பிற நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே, 'மாயமானவர்களை விரைவில் கண்டறிந்து, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Chennai,இந்தியா
10-பிப்-202022:43:37 IST Report Abuse
Balaji பப்லிக்க டெஸ்டு பண்ணா மேரியும் ஆச்சு.. சனத்தொகையும் கோரச்சா மேரியும் ஆச்சு. எனக்கென்னமோ சீனா அரசு தெரிஞ்சே பண்ணிருக்கும்னு நினைக்கறேன்.
Rate this:
Share this comment
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
10-பிப்-202019:59:48 IST Report Abuse
Rajagopal கர்மா யாரையும் விடுவதில்லை.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
10-பிப்-202015:42:04 IST Report Abuse
Natarajan Ramanathan எஸ்ரா துர்குணம் மோகன் லாசரஸ் பால் தினகரன் போன்ற பாஸ்டர்களை அனுப்பி இடுப்பில் CDயை வைத்து குணப்படுத்தி விடலாமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X