பொது செய்தி

இந்தியா

கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்து மாணவிகள் மீது 'கைவைத்த' காட்டுமிராண்டிகள்

Updated : பிப் 10, 2020 | Added : பிப் 10, 2020 | கருத்துகள் (82)
Share
Advertisement
புதுடில்லி : டில்லியில் கல்லூரி ஆண்டு விழாவின் போது வெளி ஆட்களால், மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது.கடந்த வாரம் டில்லி கார்கி கல்லூரியில் ரெவெரி என்ற பெயரில் மாலை 6.30 மணியளவில் ஆண்டு விழா நடத்தப்பட்டுள்ளது. இந்த கலாச்சார நிகழ்வின் போது கல்லூரிக்குள் மது போதையில் நுழைந்த சிலர் மாணவிகள் பலரை பாலியல் துன்புறுத்தலுக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : டில்லியில் கல்லூரி ஆண்டு விழாவின் போது வெளி ஆட்களால், மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது.latest tamil news


கடந்த வாரம் டில்லி கார்கி கல்லூரியில் ரெவெரி என்ற பெயரில் மாலை 6.30 மணியளவில் ஆண்டு விழா நடத்தப்பட்டுள்ளது. இந்த கலாச்சார நிகழ்வின் போது கல்லூரிக்குள் மது போதையில் நுழைந்த சிலர் மாணவிகள் பலரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் மாணவி ஒருவர் பதிவிட்டுள்ளார். இந்த கொடூரத்தின் போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலரும், போலீசாரும் ஏதும் செய்யாமல் அமைதியாக இருந்ததாகவும் மாணவிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.


latest tamil newsஇது தொடர்பாக மாணவி ஒருவர் கூறுகையில், அவர்கள் கல்லூரி மாணவர்கள் அல்ல. 30 முதல் 35 வயது மதிக்கதக்கவர்களாக இருந்தார்கள். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மது போதையில் இருந்தனர். அவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் புகைப்பிடித்த படங்களும் எங்களிடம் உள்ளன. முதலாம் ஆண்டு மாணவிகள் பலர் மயங்கி விழுந்தனர். பல மாணவிகள் அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடினர். மருத்துவ உதவி தேவைப்பட்ட போதிலும் கல்லூரி நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் கும்பலாக அதிகமானவர் வந்ததால் எங்களால் நகர்ந்து போக முடியவில்லை என்றார்.

இச்சம்பவம் நடந்த அன்று தாங்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கல்லூரி மாணவிகள் பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். இருப்பினும் இதுவரை எவரும் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி தனக்கு ஏதும் தெரியாது என கல்லூரி முதல்வர் பிரமிளா குமார் தெரிவித்துள்ளார். தன்னிடம் யாரும் புகார் தெரிவிக்கவில்லை எனவும், கூட்டம் அதிகமாக இருந்தது. பலத்த பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து கல்லூரி வளாகத்திற்குள் மாணவிகள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டின் தலைநகர் டில்லியிலேயே பெண்கள் கல்லூரிக்குள் அத்துமீறி நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
10-பிப்-202022:14:24 IST Report Abuse
Indhuindian Similar thing happened in a women’s college in Chennai sometime in late sixties. At that time DMK was in power
Rate this:
Cancel
Indian Ravichandran - Chennai,இந்தியா
10-பிப்-202021:32:24 IST Report Abuse
Indian  Ravichandran கேஜ்ரிவாலு என்ன செய்கிறார் கேட்ட போலீஸ் எங்க கையில் இல்லைன்னுவார். பி ஜெ பி இதை அனுமதிப்பது மிகப்பெரிய தவறு பேசுவதை விட்டு இவர்களை கை உடைத்து உள்ளே போடுங்கள்
Rate this:
Cancel
rama adhavan - chennai,இந்தியா
10-பிப்-202020:29:02 IST Report Abuse
rama adhavan Looks bluff. Lot of gent students were seen in photo. Why they didn't overpower even one introduer? Though they have phones and time to take photos none has called police control room. Why? Police cannot enter college without permission otherwise it will compound issues. In all a story was cooked but plot failed.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X