சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இருதயம்; சென்னைக்கு விமானத்தில் பறந்தது

Added : பிப் 10, 2020
Advertisement
மூளைச்சாவு, உடல்உறுப்பு, தானம், சேலம், சென்னை, இருதயம், இதயம்

ஆத்தூர்: விபத்தில் பாதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம் சேலத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை கொண்டு செல்லப்பட்டது. சேலம் அரசு மருத்துவமனையில் அதிநவீன வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் மூலம் 24 கிலோ மீட்டரை 15 நிமிடத்தில் ஓட்டுனர் கொண்டு சேர்த்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழ் நாரியப்பனூர் ஊராட்சி, பெருமாகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரது மகன் சுரேந்திரன் (20). இவர், வாழப்பாடி கோழிப்பண்ணையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார். கடந்த 8ம் தேதி சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, ஏத்தாப்பூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் அவர் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார். இதில் படுகாயமடைந்த சுரேந்திரன், சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் அவர் நேற்றிறவு (பிப்.,09) மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து இருதயம், கல்லீரல் உள்ளிட்ட ஏழு உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் ஒப்புதல் அளித்தனர்.

இதனையடுத்து அவருடைய இருதயம் எடுக்கப்பட்டு இன்று ஆம்புலன்ஸ் மூலம் சேலம் விமான நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை குளோபல் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் சேலம் அரசு மருத்துவமனையில் தீவிரமாக செய்யப்பட்டது. சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து சேலம் முள்ளுவாடி கேட் அஸ்தம்பட்டி, ஐந்து ரோடு வழியாக செல்வதற்கான போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் 24 கி.மீ., தூரத்தை 15 நிமிடத்தில் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இருதயம் செல்லும் அதே விமானத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து இறந்த வாலிபரின் பெற்றோர்கள், என் மகன் இறந்து விட்டாலும் என் மகனின் உடல் உறுப்புகள் மற்றவர்களை வாழ வைக்க பயன்படுவது ஆறுதல் அளிப்பதாக கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X