பொது செய்தி

இந்தியா

அமெரிக்க சிகரத்தில் ஏறி சாதித்த 12வயது இந்திய சிறுமி

Updated : பிப் 10, 2020 | Added : பிப் 10, 2020 | கருத்துகள் (4)
Advertisement
12YearOld, MumbaiChild, MountAconcagua, Record, Youngest, Scale, 12வயது, இந்தியசிறுமி, மலையேற்றம், சாதனை,

மும்பை: தென் அமெரிக்காவின், மிக உயரமான அகோன்காகுவா சிகரத்தை இந்தியாவை சேர்ந்த 12 வயது சிறுமி எட்டி சாதித்துள்ளார்.

மும்பையில் உள்ள கடற்படை குழந்தைகள் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் காம்யா, இந்திய தேசிய கொடியுடன் தென் அமெரிக்காவின் மிக உயரமான (6962 மீட்டர்) அகோன்காகுவா சிகரத்தில் ஏறி, குறைந்த வயதில் இந்த சிகரத்தில் ஏறியவர் என்ற சாதனை படைத்துள்ளார். 18 வயதிற்கு குறைவாக இருந்ததால் தடை விதிக்கப்பட்ட நிலையில், கோர்ட் அனுமதியுடன் மலையேறி சாதித்துள்ளார். இதற்கு முன்பு கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 24ல் லடாக்கில் 6260 மீட்டர் உயரமுள்ள மென்டோக் காங்ரி IIல், கடுமையான குளிர் காலநிலையிலும் ஏறியுள்ளார்.




இவருக்கு தந்தை கார்த்திகேயன் (இந்திய கடற்படைத் தளபதி), தாயார் லாவண்யா (ஆசிரியர்) ஊக்கமாக இருந்துள்ளனர். காம்யா சிறுவயதிலிருந்து மலையேறுதலில் அதிக ஆர்வம் கொண்டுள்ளதாக கூறுகின்றனர். மூன்றாவது வயதில் புனேயில் உள்ள லோனவாலா மலையில் ஏறிய காம்யா, 7 வது வயதில் பெற்றோருடன் சேர்ந்து உத்தரகண்ட் மாநிலத்தில் ரூப்குண்ட் (5,020 மீட்டர்) உட்பட பல உயரமான மலையேற்றங்களை முடித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக ஆப்ரிக்காவின் உயர்ந்த சிகரமான கிளிமஞ்சாரோ (5,895 மீட்டர்), ஐரோப்பாவின் உயர்ந்த சிகரமான எல்ப்ரஸ் (5,642 மீட்டர்), ஆஸ்திரேலியாவின் மிக உயரமான கோஸ்கியுஸ்கோ (2,228 மீட்டர்) என மலையேற்றத்தை தொடர்ந்துள்ளார்.

மேலும், 2021ம் ஆண்டு வடதுருவம் மற்றும் தென் துருவத்தில் உள்ள உயரமான சிகரங்கள் அனைத்திலும் ஏறி சாதனை படைப்பதே இவரின் அடுத்த இலக்காக கூறி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayanantham - tamilnaadu ,இந்தியா
11-பிப்-202000:11:25 IST Report Abuse
jayanantham வாழ்க, வளர்க. இறைவன் திருவருளால் மென்மேலும் சாதிக்கவும் கின்னஸில் இடம் பெறவும் வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Sampathkumar Sampath - Karur,இந்தியா
10-பிப்-202017:46:19 IST Report Abuse
Sampathkumar Sampath அப்பிடி போடுடா என் தங்க குட்டி ......
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
10-பிப்-202016:14:43 IST Report Abuse
தமிழர்நீதி இங்கு தெருவில் நடக்க முடியாத நிலை . பெண்களும் சிறுமிகளும் வாழ தகுதியில்லாமல் போனது , இந்தியா பிஜேபி ஆட்சியில் . இங்கு இமயம் இருந்தாலும் ,பெண்கள் ஏற முடியாது . குதிரை மேய்க்க சென்றால் கோவிலுக்குள் புஜாரிகள் இழுத்துக்கொண்டு கற்பழிப்பார்கள் ,கொடூரம் . அதனால்தான் உசரம் குறைத்தாலும் அமெரிக்கா சென்று சாதித்துள்ளார். பிஜேபி இல்லாத ஆட்சியில் இமயம் ஏறுவார்கள் இந்தியாவின் சிறுமிகள் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X