பொது செய்தி

இந்தியா

காணாமல் போன 4.5 லட்சம் கழிப்பறைகள்; ரூ.540 கோடி 'அம்போ'

Updated : பிப் 10, 2020 | Added : பிப் 10, 2020 | கருத்துகள் (71)
Advertisement

இந்த செய்தியை கேட்க

போபால் : தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ரூ.540 கோடி செலவில் கட்டப்பட்ட 4.5 லட்சம் கழிப்பறைகள் காணாமல் போயுள்ள சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.

மத்திய பிரதேசத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்கள் அதிகம் வசிக்கும் கிராம பஞ்சாயத்துகளில் அரசு சார்பில் இலவச கழிப்பறை கட்ட 2012 ம் ஆண்டு அரசு நிதி ஒதுக்கியது. 2 கட்டங்களாக பணம் ஒதுக்கப்பட்டு 2018 ம் ஆண்டிற்குள் 4.5 லட்சம் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டன. அஸ்திவாரம் போடப்பட்டதும் முதல் கட்ட நிதியும், கழிப்பறை கட்டி முடிக்கப்பட்டு, அதன் முன் வீட்டு உரிமையாளர் நின்று எடுத்துக் கொண்ட போட்டோவை சமர்ப்பித்தவுடன் அடுத்த கட்ட நிதியும் வழங்கப்பட்டுள்ளது. அரசிடம் உள்ள ஆவணங்களின்படி ரூ.540 கோடி செலவில் 4.5 கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு விட்டன.

இதனை சரி பார்ப்பதற்காக சமீபத்தில் நேரில் சென்ற அதிகாரிகள் குழு ஆய்வு செய்த போது கட்டி முடிக்கப்பட்டதாக ஆவணத்தில் இருக்கும் ஒரு கழிப்பறை கூட நிஜத்தில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக 4 பேரிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் தங்கள் வீடுகளில் கழிப்பறை கட்டாததுடன், பக்கத்து வீட்டுக்காரரின் கழிப்பறை முன் நின்று போட்டோ எடுத்து அதிகாரிகளிடம் அளித்திருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து கழிப்பறை கட்டாமல் அரசை ஏமாற்றிவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு வழங்கப்பட்ட நிதி திரும்பப் பெற்று வருவதாகவும், இதுவரை ரூ.7 லட்சம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிதி முழுவதுமாக மீட்கப்பட்ட பிறகு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெறும் காகிதத்தில் மட்டுமே இருக்கும் 4.5 லட்சம் கழிப்பறைகள் மாயமாகி உள்ள நிலையில் அதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.540 கோடி பணம் எங்கே போனது என தெரியாமல் கிராம மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர். மேலும் இது பற்றி விசாரிக்க 2வது கட்ட அதிகாரிகள் குழு ஆய்வு பணியை துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
11-பிப்-202010:54:15 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஒரு மாநிலத்தில் மட்டுமே 540 கோடி. கொள்ளை.
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-பிப்-202006:42:55 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்காவி கொள்ளை. மொத்த இந்தியாவுக்கும் கணக்கு போட்டா 25,000 கோடி மஸ்தான் பேரை சொல்லி மொங்கா.. கங்கா பேரை சொல்லி பல லட்சம் கொள்ளையடித்தது பத்தல்லை....
Rate this:
Share this comment
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
11-பிப்-202007:26:32 IST Report Abuse
VENKATASUBRAMANIAN Our people are making money thru dead body so this toilet corruption is not furious . This is because of corrupt officials and local politicians . Govt can introduce good schemes for poor people but ution is done by officials . Unless heavy punishment is imposed this will not be dtopped . First punishment chease all properties and dismiss immediately. The officials will afraid of doing such things. If politicians attach properties to govt till he proves . If no punishment , nobody can do anything.
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
11-பிப்-202007:01:53 IST Report Abuse
skv srinivasankrishnaveni நம்ம சனங்களை திருத்தவேமுடியாது ஓசில துன்னு கழிஞ்சுண்டுகிடக்கும் பிசினாரிகளே தான் மக்கள்பணத்தை கொள்ளை அடிச்சவனெல்லாம் தான் நிதிமந்திரியாவே இருந்தானுக ஒருபதவிலேயும் இல்லாத ராகுல் அவன் அம்மா சோனியா எல்லாம் என்ன பரம்பரையா கோடீஸ்வராஇல்லீங்க சோனியா வெறும் சாதாரன லேடி இந்த ராஜிவ் ஐ காதல்பண்ணிண்டு மேரேஜ்பண்ணிண்டுவந்தா இன்று அவ பெரிய VVVVVVVVVVIP
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-பிப்-202006:43:56 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்இப்போ மட்டும் சொம்புஸ் எல்லாம் சனங்களை பழிக்கிறாப்புலே. ஆட்டையை போட்ட காவி அரசை பழிக்கல்லை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X