சிஏஏ.,க்கு எதிரான தீர்மானத்தை ஏற்க முடியாது: கிரண்பேடி கடிதம்

Updated : பிப் 10, 2020 | Added : பிப் 10, 2020 | கருத்துகள் (35)
Advertisement
Puducherry, CAA, Governor, Kiranbedi, CM, Narayanasamy, புதுச்சேரி, சிஏஏ, தீர்மானம், குடியுரிமைசட்டம், கவர்னர், கிரண்பேடி, முதல்வர், நாராயணசாமி

இந்த செய்தியை கேட்க

புதுச்சேரி: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சி.ஏ.ஏ,) எதிராக தீர்மானம் நிறைவேற்ற புதுச்சேரி அரசு திட்டமிட்டிருந்த நிலையில், அதனை ஏற்க முடியாது என புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிஏஏ.,வை திரும்ப பெற வலியுறுத்தி, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்குவங்கம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களும் சிஏஏ.,க்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கிடையே, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் தங்கள் மாநிலத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அறிவித்தார். இதற்காக பிப்.,12ம் தேதி சிறப்பு சட்டசபை கூட்டத்தை கூட்டவும் முடிவு செய்யப்பட்டது.




இந்நிலையில், பாஜ.,வை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.,க்கள் கவர்னர் கிரண்பேடிக்கு கடிதம் அனுப்பினர். அதில், சிஏஏ.,க்கு எதிராக புதுச்சேரி அரசு கொண்டு வரும் தீர்மானத்திற்கு அனுமதிக்க கூடாது என வலியுறுத்தப்பட்டது. இதனையடுத்து, நாராயணசாமிக்கு, கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார். அதில், சிஏஏ விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் சட்டசபையில் நிறைவேற்றப்படும் எந்தவொரு நடவடிக்கையும் ஏற்க முடியாது. இதனால், சிஏஏ குறித்து சட்டசபையில் விவாதிக்கூடாது, என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
11-பிப்-202010:56:14 IST Report Abuse
oce தாண்டவ கோனாரே நாராயணசாமி மட்டும் என்ன வாலிபரா. அவரும் வயதானவர் தானே.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
11-பிப்-202010:54:10 IST Report Abuse
oce கவர்னர் தன் கடமை அல்லது வேலை என்ன என்று தெரியாமலே வேலை செய்யும் ஒரு கவர்னர் யை இந்தியா போன்ற நாட்டில் தான் பார்க்க முடியும். மாநில முதல்வர் கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசின் சட்ட திட்ட க்கு உள் இருக்கிறதா என்பதை சொல்லத்தான் கவர்னர் இருக்கிறாரே தவிர வேறு எதற்கும் இல்லை.ருவி ஓமன் சாந்த குமார். கவர்னர் பதவி முதல்வரின் ரப்ர் ஸ்டாம்ப்ல்ல. கொண்டுவரும் தீர்மானம் அரசியல் சட்டத்திற்குட்பட்டதா இல்லையா என்பதை எந்த அலகு நிர்ணயத்தை வைத்து தீர்மானிப்பீர்கள். இதற்கான சிறப்பம்சங்கள் அரசியல் சட்டத்தில் விவரப்படுத்தப்பட்டுள்ளதா. தெரிவியுங்கள். பொலிட்டிகல் சைன்ஸ் படித்தவர்கள் எவரும் இதுவரை இந்திய அரசியல் வாதிகளாக இல்லை. நீங்கள் படித்த பொலிட்டிகல் சைன்ஸில் இது பற்றி இருந்தால் விளக்குங்கள்.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
11-பிப்-202008:39:23 IST Report Abuse
oce நாராயண சாமிக்கு கிடைத்த சவுக்கடி. செமத்தியான அடி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X