அரசியல் செய்தி

தமிழ்நாடு

டெல்டாவை காப்பதாக அறிவித்தது கண்துடைப்பா? கடலூரில் ரூ.50 ஆயிரம் கோடியில் பெட்ரோலிய ஆலை

Added : பிப் 10, 2020
Share
Advertisement

சென்னை: சேலத்தில் நேற்று (பிப்., 9ம் தேதி) நடந்த கால்நடைப்பூங்கா திறப்புவிழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, ''டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதி தராது,'' என, உறுதியாகக் குறிப்பிட்டார்.



latest tamil news


அதேநாளில் முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில், 'விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டும், தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் டெல்டா பகுதிகள் 'பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக' மாற்றப்படும்.


latest tamil news


'காவிரி டெல்டா பகுதிகளை 'பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக' செயல்படுத்த சட்ட வல்லுனர்களை கலந்தாலோசித்து இதற்கான ஒரு தனிச்சட்டம் இயற்றிட, அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.'டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை தொடங்க இவ்வரசு எப்போதும் அனுமதி அளிக்காது' எனப் பதிவிட்டிருந்தார்.இந்த அறிவிப்புக்கு விவசாய சங்கங்கள் வரவேற்பு தெரிவித்தன. பல்வேறு அரசியல் கட்சியினரும் முதல்வருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.இந்த ஒரு அறிவிப்பால், விவசாயிகள் மற்றும் டெல்டா மக்களிடம் மிகப் பெரிய செல்வாக்கை அ.தி.மு.க., பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டன.


latest tamil news


ஆனால், கடந்த 8ம் தேதி, முதல்வரின் டுவிட்டர் பக்கத்தில், 'அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது மேற்கொண்ட எம்.ஓ.யூ.,வி-ன் தொடர்ச்சியாக முதல்வரை, ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் (Haldia petrochemicals) நிறுவன தலைவர், நிர்வாக துணை தலைவர் ஆகியோர் சந்தித்து, கடலூர் மாவட்டத்தில் ரூ.50,000 கோடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல் ஆலை நிறுவுவது குறித்து ஆலோசித்தனர்' எனப் பதிவிட்டு, ஒரு வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.இதற்கு, 'கடலூரில் பெட்ரோ கெமிக்கல் ஆலையை நிறுவ முயற்சித்து வரும் முதல்வர், டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பது அபத்தமாக உள்ளது. அவரது அறிவிப்பில், 'காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக செயல்படுத்த, சட்ட வல்லுனர்களுடன் கலந்தாலோசிக்கப்படும்' என உள்ளது. அதனால், அதை நிறைவேற்ற மாட்டார்கள்.'மேலும், ஹைட்ரோகார்பனுக்கு தடை விதிப்பதாக அறிவித்துவிட்டு, விவசாய பூமியில் ரூ.50,000 கோடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல் ஆலையை நிறுவ முதல்வர் முயற்சிக்கிறார். எனவே, டெல்டாவை பாதுகாப்பதாக அறிவித்திருப்பது வெறும் கண்துடைப்பே' என, சமூக வலைதளங்களில் கண்டனக் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X