பொது செய்தி

இந்தியா

இன்ஜி., படிப்புக்கு கட்டணம் உயருகிறது: ஏ.ஐ.சி.டி.இ., பரிந்துரை

Updated : பிப் 10, 2020 | Added : பிப் 10, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
EngineeringCourses, AICTE, FeeRevision, TNColleges, FeeHike, Engineering, Engg, இன்ஜினியரிங், பொறியியல், கட்டணம், உயர்வு, பரிந்துரை, ஏஐசிடிஇ,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பள கமிஷனின் விதிமுறைப்படி சம்பளம் வழங்கிட படிப்பு கட்டணத்தை உயர்த்த அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.

இன்ஜினியரிங் கல்லூரிகள் தங்களுக்கு சம்பள கமிஷன் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி சம்பளம் வழங்கப்படுவதில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு (ஏ.ஐ.சி.டி.இ) ஏராளமான புகார்கள் வந்தன. இதனையடுத்து ஏஐசிடிஇ., சார்பில் அனைத்து மாநில அரசுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. அதில், ஆறாவது மற்றும் ஏழாவது சம்பள கமிஷனின் ஆணைகளை பரிசீலிக்கும்படி வலியுறுத்தப்பட்டது. இன்ஜி., கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது.


latest tamil news


தற்போது, தமிழகத்தில் உள்ள இன்ஜி., படிப்புகளுக்கு மாநில கட்டண நிர்ணய கமிட்டி தான் கட்டணம் நிர்ணயம் செய்து வருகிறது. கடைசியாக 2017-18ம் ஆண்டில் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. ஆனால், நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியின் பரிந்துரைப்படி, இன்ஜி., படிப்புகளுக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.1.44 லட்சத்தில் இருந்து ரூ.1.58 லட்சமாக கட்டணமாக வசூலிக்கலாம் எனக்கூறப்பட்டது. குறைந்தபட்ச கட்டணமாக எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. தமிழகத்தில், அரசு கோட்டாவின் கீழ் ஆண்டுக்கு ரூ.55 ஆயிரமும், நிர்வாக கோட்டாவின் கீழ் ரூ.90 ஆயிரமும் வசூலிக்கப்படுகிறது.


latest tamil news


இதனால், இன்ஜி., படிப்புகளுக்கான கட்டணத்தை அதிகரித்தால் மட்டுமே சம்பள கமிஷன் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின்படி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியும் என ஏஐசிடிஇ பரிந்துரை செய்துள்ளது.

அதாவது கட்டணத்தை 50 சதவீதம் அளவிற்கு உயர்த்த வேண்டும் எனவும், குறைந்தபட்ச கட்டணத்தை கவுன்சில் நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது. இதனால், இன்ஜி., படிப்புகளுக்கான கட்டணம் உயரும் அபாயம் எழுந்துள்ளது. இன்ஜி., படித்து வேலை கிடைக்காமல் மாணவர்கள் பரிதவித்து வரும் நிலையில், கட்டண உயர்வு ஏற்பட்டால், தொழில்நுட்ப படிப்பினை விரும்பி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை நிச்சயம் குறையும் என கல்வி வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karthikeyan.p - trichy,இந்தியா
11-பிப்-202013:27:33 IST Report Abuse
karthikeyan.p நான் ஒரு இடத்தில் ஒரு விளம்பரம் பார்த்தேன் அதில் ஆட்கள் தேவை ::: தோசை /பரோட்டா மாஸ்டர் சம்பளம் Rs:15000/PM Engineer க்கு சம்பளம் Rs::8000/PM என போட்டிருந்தது .....எப்படி இருக்கு நிலைமை பாருங்கள்... நல்ல பதிவு
Rate this:
Cancel
vasan - doha,கத்தார்
11-பிப்-202000:41:11 IST Report Abuse
vasan கொரோனா வைரஸ் போல 45 மார்க் எடுத்தவன் எல்லாம் இன்ஜினியரிங் படிச்சி லட்சக்கணக்கில் இருக்கிறார்கள்... எதையோ எழுதி வைத்து பாஸ் பண்ணி வந்தாச்சு...அந்த cut off மார்க்கும் கொஞ்சம் உயர்த்தி 70% ஆக்க வக்கு இல்லை இந்த மத்திய மாநில அரசுகளுக்கும்...பீகார் வட இந்தியாவில் புத்தகத்தை கொடுத்து எல்லா எக்ஸாமும் நடக்குது அதை கேட்க வக்கு இல்ல இந்த மத்திய அரசாங்கத்துக்கு....அண்ணா யூனிவர்சிட்டி முறைகேடு வழக்கில் கைது ஆனவர்கள் என்ன ஆனார்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்.........கஷ்டப்பட்டு எழுதிய மாணவன் fail ஆக்க படுகிறான் இவர்களின் கவனக்குறைவால் எத்தனை மாணவர்களின் வாழ்க்கை பாதிக்க பட்டு இருக்கிறது...
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
10-பிப்-202018:18:30 IST Report Abuse
Lion Drsekar நற்கருத்துக்களை யாரும் கேட்க தயாராக இல்லாத நிலைப்பாடு, எல்லாமே அவர்களுக்குள்ளாகவே நடந்து கொண்டு இருக்கிறது,தற்போது ஐ டி கம்பெனியில் சேரும் இளைஞர்கள் அவர்களுடன் பணிபுரியும் சகஊழியர்கள் வேலையே செய்யாமல் அனைத்தையுமே கடுமையாக உழைக்கும் நண்பர்களிடம் கொடுத்துவிட்டு அனைத்து சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு அனைத்தையும் பெற்றுக்கொள்கிறார்கள், இது ஒரு புறம், மற்றொரு புறம் ஒரு சிலரை எப்போதுமே ஒன்று அதிகாலை அல்லது இரவு வேலைக்கு வரவேண்டும் என்று வற்புறுத்துதல், இதன் நடுவில் நேர்மையாக பணியாற்றும் இளைஞர்களுக்கு நான்காவது பக்கட் கொடுத்து வீட்டுக்கு அனுப்புகிறார்கள், இது தவிர உயர்ந்த பதவியில் இருப்பவர்களும் எந்த வித முன் அறிவிப்பும் இன்றி வேலையை விட்டு தூக்கிவிடுகிறார்கள், மனஉளைச்சலுக்கு அதிகமாகி சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள், பலர் மனநலம் பாதிக்கப்படுகின்றனர், ஆகவே பொறியில் படிக்கு படித்தவர்கள் தற்போது அரசு வேலைக்கு தட்டச்சு மற்றும் கணினி வேலைக்கு தயாராகிவருகின்றனர், இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு சிறிய கணக்கு: பள்ளிக்கே போகாமல் ஆடு மற்றும் மாடு மேய்ந்தால் 18 ஆண்டுகளில் கோடீஸ்வரன் ஆகலாம் என்று மாணவர்கள் கூறிக்கொண்டு இருக்கிறார்கள், இப்படி இரவும் பகலும் தங்களைவருத்தி படித்து , மன உளைச்சலுக்கு ஆளாகும் ஒரு சூழ்நிலையில் என்ன செய்வது என்று அறியாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு யாருமே வழி காட்டில் இல்லை? கல்வித்துறையும் நான்காண்டு படிப்புக்கு கட்டணம் வசூலிப்பதோடு சரி? முதலில் வேலை இல்லா பட்டதாரிகளுக்கு முறையான ஆலோசனையை , நல்ல , தேர்ச்சி பெற்ற, உண்மையிலேயே வாழ்க்கைக்கு உகந்த , பயனுள்ள கருத்துக்களை மாணவர்களுக்கு வழங்கவேண்டிய நிலைக்கு இந்த பொறியில் கல்லூரிகள் முன்வரவேண்டும், அதே போன்று , தங்களுக்கு இருந்த எதிர்காலம் காத்திருக்கிறது என்பதில் உறுதியாக இருக்கும் நிலையில் அதைக்களையும் வகையில் அவர்களுக்கு வாழ்க்கைக்கு தேவையான , சுய வேலைக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் எடுத்துக்கூறவேண்டும், நாளை என்பதே நமக்கு இல்லை என்ற நோக்கில் பணியில் சேர்ந்த நிலையில் தடுமாறி, பாதை மாறி செல்லும் ஆயிரக்கணக்கான மாணவர்களையும் அழைத்து பேசவேண்டியது அந்த அந்த கல்ல்லூரிகளின்கடமை, அலுமினி கிளப் என்று ஒன்று இருக்கிறது அது அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்களுக்கு மட்டுமே பயன்படுகிறது, இங்கு அனைத்து வசதிகளும் இருக்கிறது, இதை தற்போது பயன்படுத்துவோர் பட்டியலில் எல்லோருமே 60 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே? அங்குள்ளவர்கர்களின் திறமைகள் மற்றும் அனுபவங்களை பயன்படுத்திக்கொள்ளலாம், பல வழிகள் இருக்கின்றன, இதைவிட தற்போது மிக மிக அமைதியாக நடந்து கொன்று இருக்கும் மற்றொன்று வழி தெரிந்தவர்கள் வெளிநாட்டுக்கு குடியேறுவதற்கு அனைத்து நாடுகளுக்கும் விண்ணப்பித்துக்கொண்டு இருக்கிறார்கள், கல்வி நிறுவனங்கள் வியாபராமகிப்போனதுதான் விளைவு, இளைஞர்களின் எதிர்காலம் கைவிட்டுப்போகாமல் நல் வழிகாட்ட வேண்டியது நமது கடமை , வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X