ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

Updated : பிப் 10, 2020 | Added : பிப் 10, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்நாடகமல்ல அது ஒரு ஆன்மீக அனுபவம்ஆன்மீகப் பேரலையை எழுப்பியவர்அதற்கான பாதையை எளிமையாக்கியவர்அதன் தேவையை உணர்த்தியவர்இந்து மதத்தையும் அதன் முக்கியத்துவத்தையும்உலகிற்கு எடுத்துரைக்க அவதாரம் செய்தவர்சதா சர்வகாலமும் அனைத்து ஜீவனுக்குள்ளும்இருந்து வழி நடத்துபவர்அவரே ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்அவரைப்பற்றியது

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்நாடகமல்ல அது ஒரு ஆன்மீக அனுபவம்latest tamil newsஆன்மீகப் பேரலையை எழுப்பியவர்அதற்கான பாதையை எளிமையாக்கியவர்அதன் தேவையை உணர்த்தியவர்இந்து மதத்தையும் அதன் முக்கியத்துவத்தையும்உலகிற்கு எடுத்துரைக்க அவதாரம் செய்தவர்சதா சர்வகாலமும் அனைத்து ஜீவனுக்குள்ளும்இருந்து வழி நடத்துபவர்அவரே ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்


latest tamil newsஅவரைப்பற்றியது மஹாலக்ஷ்மி லேடீஸ் நாடகக் குழுவினரின் சமீபத்தில் மேடையேற்றி அசத்திய பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் என்ற நாடகம்.


latest tamil news


Advertisement


பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸரை சிறுவனாக, இளைஞராக, வயதானவராக மேடையில் தோன்ற வைத்து நம்மை ஒரு பரவச நிலைக்கே அழைத்துச் செல்கிறார் இந்த நாடகத்தை எழுதி - இயக்கியுள்ள பாம்பே ஞானம்.


latest tamil newsமனைவியைத் தவிர அனைத்து பெண்களையும் அம்மாவாக பார்க்கவேண்டும் என்றுதான் சொல்லித்தந்துள்ளனர் ஆனால் நீங்களோ மனைவியையே அம்மாவாகப் பார்க்கும் உயர்ந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்று சொல்லும் இடத்தில் ரசிகர்கள் கைதட்டி மகிழ்கிறார்கள் இது போல அரங்கத்தை அதிரச்செய்யும் கைதட்டல்கள் பலமுறை வருகிறது.


latest tamil news


குழந்தை வேண்டும் குழந்தை வேண்டும் என்று ஆசைப்படும் சாரததேவியை,ராமகிருஷ்ணர் எப்படி பல குழந்தைகளுக்கு தாயாக்குகிறார் என்பது அருமையான காட்சி.


latest tamil newsஅதே போல ஆரம்பத்தில் ராமகிருஷ்ணரை ஏற்க மறுத்து அவரோடு விவாதத்தில் ஈடுபடும் விவேகானந்தர் ஒரு கட்டத்தில் காளியின் முகத்தில் ராமகிருஷ்ணரை தரிசித்துவிட்டு மனம் உருகி நிற்கும் காட்சியில் அரங்களே உருகுகிறது மருகுகிறது.படித்தது பார்த்தது அறிந்ததை வைத்து அவரைப்பற்றி சில துளிகளை நாடகமாக்கியுள்ளோம் பாருங்கள் என்று சொல்லித்தான் நாடகத்தை ஆரம்பித்தார் ஆனால் அவர் தந்தது அனனத்தும் தேன்துளிகள் மொத்த நாடகமும் ஒரு புதிய ஆன்மீக அனுபவத்தை தந்தது நடிப்பு மேடை அமைப்பு வசனம் என்று எதிலும் சோடை போகாத நாடகமிது.
விவேகானந்தர் தனது குருவான ராமகிருஷ்ணரைப் பற்றி விவரிக்கும் வகையில் நாடகம் செல்கிறது நாடகம் ராமகிருஷ்ணரைப் பற்றியது என்றாலும் விவேகானந்தருக்கும் சாராததேவிக்கும் உள்ள முக்கியத்துவத்தையும் குறைத்துவிடவில்லை.காளியிடம் நடத்தும் ஆவேச உரையாடலின் போதும்,சன்னதியில் நின்று கொண்டு வேறு சிந்தனையில் இருந்த ராணியை அறையும் போதும்,காளியின் தரிசனத்தின் போதும் ராமகிருஷ்ணராக நடித்த வர்ஷாவின் நடிப்பு பிரமாதம்.பெண்கள் மட்டுமே அடங்கிய இந்தக் குழுவில், நேர்த்தியான ஒப்பனையின் மூலம் இராமகிருஷ்ண பரமஹம்ஸர், சுவாமி விவேகானந்தர், அன்னை சாரதா தேவி, காளி மாதா, துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி மற்றும் இன்னும் பல கதாபாத்திரங்களை தத்ரூபமாக நம் கண்முன்னே நிறுத்திய ஒப்பனைக் கலைஞர்கள் கண்ணன், ஸ்வாமிக்கு தனிப்பாராட்டுக்கள்.
கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடிகர்களைதேர்வு செய்வதில் தனி திறன் படைத்தவர் என்பதை இந்த நாடகத்திலும் பாம்பே ஞானம் நிரூபித்திருக்கிறார். மோகன் பாபுவின்அரங்க அமைப்பு, முக்கியமாக மலை உச்சியில் மாதா காளியின் திரு உருவச் சிலையும், இறுதிக் காட்சியில் பகவானின் திரு உருவச் சிலையும் கண்களுக்கு ஒரு பக்தி விருந்தாகவே அமைந்திருந்தது.மொத்தத்தில் ஆன்மிக அனுபவம் வேண்டுவோர் அவசியம் காண வேண்டிய நாடகம் இதுவாகும்.இந்த நாடகம் வருகின்ற 22,23,24 ஆகிய தேதிகளில் சென்னை தி.நகர் கிருஷ்ண கான சபாவில் நடக்கிறது.அனுமதி இலவசம்.
-எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Muthuraj - Sivakasi,இந்தியா
13-பிப்-202021:40:57 IST Report Abuse
K.Muthuraj dmr852920
Rate this:
Cancel
Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா
10-பிப்-202019:47:30 IST Report Abuse
Nallappan Kannan Nallappan வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X