இந்த செய்தியை கேட்க
பீஜிங்: சீனாவின் வுஹான் நகரில் உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள, 'கொரோனா வைரஸ்' உருவானது. சீனாவின் பிற பகுதிகளை மட்டுமின்றி, 28 நாடுகளுக்கும் வேகமாகப் பரவியது.

'கொரோனா வைரசால் தற்போது வரை, 904 பேர் உயிரிழந்துள்ளனர்; 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சையில் உள்ளனர்' என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும், சீனாவைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரரான குவோ வெங்கூய் (guo wengui), 'வுஹான் நகருக்குள் யாரும் நுழைய முடியாதபடி கட்டுப்பாடுகளை விதித்துள்ள சீன அரசு, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் சடலங்களை யாருக்கும் தெரியாமல் அங்கு எரித்து வருகிறது. தினமும் 1,200 சடலங்கள் எரிக்கப்படுகின்றன. இதுவரை, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சடலங்கள் எரிக்கப்பட்டிருக்கலாம். மேலும், 15 லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சீன அரசு இவை அனைத்தையும் மறைத்து வருகிறது' எனத் தெரிவித்துள்ளார்.

சீன சுகாதாரத் துறை, '3.8 கோடி பேர் வசிக்கும் வுஹானில், 50 லட்சம் பேர் மாயமாகி உள்ளனர். அவர்கள் மூலமும் இந்த வைரஸ் பரவக் கூடும். அவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்' எனத் தெரிவித்துள்ள நிலையில், குவோ வெங்கூய்யின் கருத்து, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE