பொது செய்தி

இந்தியா

தவித்த மூதாட்டிக்கு ரூ.70 லட்சம் நஷ்டஈடு: விமான நிறுவனங்களுக்கு உத்தரவு

Updated : பிப் 10, 2020 | Added : பிப் 10, 2020 | கருத்துகள் (4)
Advertisement
70Lakh, Fine, Airlines, 60Yr_OldWoman, Airport, 70லட்சம், அபராதம், நஷ்டஈடு, விமானநிறுவனங்கள், மூதாட்டி,

சண்டிகர்: சண்டிகரை சேர்ந்த 60 வயது மூதாட்டியை தவிக்கவிட்ட விமான நிறுவனங்கள் மற்றும் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு ரூ.70 லட்சம் நஷ்டஈடு தர நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்த ஹர்ஷன் கவுர் (வயது 60) என்பவர், கடந்த 2018ம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்கா செல்ல திட்டமிட்டார். அதன்படி, சூர்யா டிராவல்ஸ் நிறுவனம் மூலம் அமெரிக்கா செல்லவும், மார்ச் மாதம் திரும்பி வருவதற்கும் டிக்கெட் முன்பதிவு செய்து அமெரிக்கா சென்றார். தனது சுற்றுப்பயணத்தை முடித்து ஹர்ஷன் இந்தியா திரும்பினார். சான் பிரான்சிஸ்கோவிலிருந்து பிராங்பர்ட் வழியாக டில்லி வர வேண்டிய அவரை, லுப்தான்ஸா விமான நிறுவனம் தனது அலட்சிய போக்கால் டென்மார்க்கில் இறக்கிவிட்டு சென்றது. அங்குள்ள கோப்பனேகன் விமான நிலையத்தில் இருந்து டில்லிக்கு விமானம் வரும் என கூறியதால், அங்கேயே காத்திருந்தார்.





ஆனால், தகுந்த விசா இன்றி டென்மார்க் நாட்டில் இறங்கியதால் சட்ட விரோத குற்றச்சாட்டில் ஹர்ஷன் கைது செய்யப்பட்டார். அன்றைய நாள் முழுவதும் சிறையில் இருந்த அவர் தனது மகனின் உதவியால் மறுநாள் காலை விடுவிக்கப்பட்டார். பின்னர், லுப்தான்ஸா விமான நிறுவனம் சார்பில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணிக்க டிக்கெட் வழங்கியது. அதனை பெற்று, அங்கிருந்து லண்டன் சென்று பின்னர் லண்டனிலிருந்து டில்லி வந்தடைந்தார். வயதான காலத்தில் இப்படி அலைக்கழித்தது, விமான நிறுவனத்தின் தவறால் சிறை சென்றது என ஹர்ஷன் மிகவும் மன உளச்சலில் இருந்துள்ளார்.





இது தொடர்பாக நுகர்வோர் ஆணையத்திடம் அவர் புகார் அளித்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், பயணத்தை வழிநடத்த ஹர்ஷனுக்கு தேவையான விசா வழங்காததால் அவருக்கு, லுப்தான்ஸா மற்றும் பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் ரூ.64.5 லட்சமும், சூர்யா டிராவல்ஸ் ரூ.5 லட்சமும், தவறுக்கு காரணமான மூன்று தரப்பினரும் சேர்ந்து கூடுதலாக ரூ.50 ஆயிரமும் மொத்தம் ரூ. 70 லட்சம் நஷ்டஈடாக வழங்க உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S BALA - Chennai,இந்தியா
11-பிப்-202016:24:13 IST Report Abuse
R S BALA அசிங்கப்பட்டானுங்க விமானக்காரனுங்க...
Rate this:
Share this comment
Cancel
kamal -  ( Posted via: Dinamalar Android App )
10-பிப்-202020:04:19 IST Report Abuse
kamal நம் நாட்டில் எல்லாமே உத்தரவு மட்டும் தான்.. நிறைவேறாது..
Rate this:
Share this comment
Cancel
karutthu - nainital,இந்தியா
10-பிப்-202018:29:02 IST Report Abuse
karutthu தீர்ப்பு நல்லாத்தான் இருக்கு ஆனால் சொன்னபடி பணத்தை தருவார்களா ???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X