பொது செய்தி

இந்தியா

சபரிமலையில் பிப்., 13 நடைதிறப்பு

Updated : பிப் 10, 2020 | Added : பிப் 10, 2020 | கருத்துகள் (1)
Advertisement

பந்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பூஜையை முன்னிட்டு பிப்., 13 ல் நடை திறக்க உள்ளது.






கேரள மாநிலம் பந்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் மாசி மாத பிறப்பையொட்டி மாசி மாத பூஜைக்காக வரும் 13 ம் தேதி (பிப்.,13) ல் ஐயப்பன் சன்னிதானத்திற்கான நடை மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரு மகேஷ் மோகனரு முன்னலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்டுவார். அன்று மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது மற்றும் பக்தர்களின் தரிசனத்திற்கு பின் இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். மறுநாள் (பிப்., 14) காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடக்கும். அன்று முதல் பிப்., 18 வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

தொடர்ந்து இந்த நாட்களில் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெறும். வழக்கமான பூஜைகளுடன் கோவில் தந்திரி கண்டரு மகேஷ் மோகனரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறும். பின் 18 ம் தேதி இரவு நடை அத்தாழ பூஜைக்கு பிறகு நடை அடைக்கப்படும்.





சபரிமலை கோவில் நடை திறப்பையொட்டி பக்தர்களின் வசதிக்காக திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், ஆலப்புழா போன்ற நகரங்களில் இருந்து பம்பைக்கு பஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கொடுக்கு - Ang Mo Kio ,சிங்கப்பூர்
10-பிப்-202019:58:19 IST Report Abuse
கொடுக்கு நீங்கள் நடை திறக்காவிட்டாலும் நாங்கள் எங்கள் அன்றாட பணிகளை செய்வோம் , வேலை செய்வோம் சாப்பிடுவோம் .. தூங்குவோம் ....உங்கள் நடை திறக்காமல் இருந்து பாருங்கள் ஒன்றும் கெட்டுப்போகாது 😁😁
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X