சபரிமலை கோவிலில் பெண்கள் அனுமதி வழக்கு ; சுப்ரீம்கோர்ட் உத்தரவு

Updated : பிப் 10, 2020 | Added : பிப் 10, 2020 | கருத்துகள் (9)
Advertisement

புதுடில்லி : சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களையும் அனுமதிப்பது உள்ளிட்ட அனைத்து மத விவகாரங்களையும் 9 நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரிக்கும் என சுப்ரீம்கோர்ட்டின் தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.


கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என 2018 ல் சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது. சுப்ரீம்கோர்ட்டின் இந்த உத்தரவை ஏற்று பல மாநில பெண்களும் சபரிமலைக்கு பயணம் செய்தனர். ஆனால் இந்த தீர்ப்பை ஏற்காத கேரள மாநில அரசு சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்க கூடாது என கூறி இந்த தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்தது.

மறுஆய்வு செய்யக்கோரி 61 சீராய்வு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் கோவிலுக்கு சென்ற பெண்கள் வழியிலேயே கோவில் நிர்வாகத்தினராலும் பக்தர்களாலும் தடுத்து நிறுத்தப்பட்டனர். கடந்த நவம்பரில் இச்சீராய்வு மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இதனை 9 நீதிபதிகள் அமர்வு விசாரித்து இறுதி முடிவு எடுக்கும் என்று கூறியது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பாப்டே முன்னிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. சபரிமலை வழக்குடன், மசூதிகளில் முஸ்லிம் பெண்களை அனுமதிப்பது பற்றியும், பிற மதங்களைச் சேர்ந்த ஆண்களை திருமணம் செய்த பார்சி இன பெண்களை வழிபாட்டு தலங்களில் அனுமதிப்பது குறித்தும், தாவூதிபோரா இன பெண்கள் தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் இந்த அமர்வு விசாரிக்கும் என்று தலைமை நீதிபதி கூறினார். மேலும் இந்த மனுக்கள் தொடர்பாக பிப்., 10 ல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறினார்.

இந்நிலையில் இந்த மனுக்கள் மீது நீதிபதி பிறப்பித்த உத்தரவுகள் பின்வருமாறு:
சபரிமலை கோவிலில் பெண்கள் அனுமதி குறித்தும் அனைத்து மத வழிபாடுகள் மற்றும் சுதந்திரம் குறித்தும் விசாரணை நடக்கும். நாளை மறுநாள் முதல் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும். மத வழபாடு தொடர்பான பொது நல வழக்கு மற்றும் அவர்களது சதந்திரம் குறித்தும் 9 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும். ஏற்கனவே 5 நீதிபதிகள் அமர்வு எழுப்பிய கேள்விகள் குறித்தும் விசாரிக்கப்படும். இவ்வாறு கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Murugan - Nagercoil,இந்தியா
11-பிப்-202018:35:56 IST Report Abuse
N.Murugan மதத்தின் பேரில் பெண்களை அடிமை ஆக்கி கொடுமை படுத்துவது எந்த மதத்தில் நடந்தாலும் ஏற்புடைய விஷயம் அல்ல. பெண்களை அடிமை ஆக்கி கடவுளை வழிபடுவது தெய்வ வழிபாடாக இருக்கது முருகன் காருபாறை
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
11-பிப்-202015:36:29 IST Report Abuse
bal பெண்கள் அனுமதி சரிதான்...அனால் இந்த சாக்குபோக்கில் மற்ற மத பெண்கள் பெண்ணுரிமை என்ற பெயரில் குளிக்காமல் கூட அதிகாலை கோவிலுக்குள் போனது..இதை கேட்க யாரும் இல்லை என்ற திமிர்.
Rate this:
Share this comment
Cancel
Santhosh Kumar - Chennai,இந்தியா
11-பிப்-202011:45:12 IST Report Abuse
Santhosh Kumar எங்கு அனுமதித்தாலும் ஹிந்து கோவில்களில் குறிப்பாக சபரிமலையில் அனுமதிக்க கூடாது. ஏனென்னில், வேற்று மாதத்து மாதவிடாய் பெண்கள் கோவிலுக்குள் நுழைய அதிகமான சத்யதைகள் உள்ளன. ஹிந்து கோவில்கள் பேய்களை (இறந்து மூன்று நாட்கள் கடந்த பிறகு எழுந்து வந்ததாக கருதப்படுவது) கடவுளாக வழிபாடும் சிலருக்கு வேண்டுமானால் எதனையும் அனுமதிக்கும் முறைகேட்டை கலாசாரம் இருக்கலாம், ஆனால் ஹிந்துக்களுக்கு கிடையாது. அதனால் உச்சநீதி மன்றம் பலதும் அலசி ஆராய்ந்து வேண்டுமானால் ஹிந்து ஆன்மிகவாதிகளை கலந்தாலோசித்து முடிவெடுப்பது வரவேற்கத்தக்கது. கோர்ட்டின் தீர்ப்பை எதிரிக்கக் கூடாது என்ற எண்ணம் உடைய ஹிந்துக்களின் மனதினை புண்படுத்தாமல் இருப்பது கோர்ட்டின் கடமையும் ஆகும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X