கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தால் ரூ.1 கோடி பரிசு: ஜாக்கிசான் அறிவிப்பு

Updated : பிப் 10, 2020 | Added : பிப் 10, 2020 | கருத்துகள் (15)
Advertisement

ஹாங்காங் : கொரோனா வைரசிற்கு மருந்து கண்டுபிடித்தால் அவர்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசளிப்பதாக நடிகர் ஜாக்கி ஜான் அறிவித்துள்ளார்.






சீனாவின் வூஹான் நகரில் பரவிய கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா வைரசிற்கு இதுவரை 908 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உலக அளவில் 37 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக கூறப்படுகிறது. கொரோனா பரவாமல் இருக்க சீனா உட்பட பல நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் நோயை தடுக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளன. இதற்காக அவசர அவசரமாக 1000 படுக்கையறைகளுடன் இரண்டு தற்காலிக மருத்துவமனைகளையும் உருவாக்கி உள்ளது.





இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகரான ஜாக்கி ஜான் இது தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுவதாவது: இந்த கொரோனா வைரசால் பல உயிர்கள் தினமும் பலியாகிறது. இ்நத கொரோனா வைரசினை தடுக்க விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மிக முக்கியம். அதனால் வைரசினை கட்டுப்படுத்த விரைவில் புதிய மருத்துகளை கண்டுபடிக்கமுடியும் என நம்புகிறேன். எனனுடைய தோழர்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. சீன மருத்துவர்களும் கொரோனாவுக்கு எதிராக பல செயல்படுகளையும் நடத்தியும் உயிர்பலி நின்றபாடில்லை.

ஒரு தனி நபரோ அல்லது குழுவாகவோ சேர்ந்து கொரோனா வைரசிற்கு மருந்து கண்டுபிடித்து கொடுத்தால் அவர்களுக்கு 1 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் 1,02,21,520.00 கோடி ரூபாய்) பரிசாக வழங்கப்படும். இந்த அறிவிப்பு பணத்தை பொருட்டாக கொண்டதல்ல. எனது நண்பர்கள் வைரசால் பாதிக்கப்பட்டு போராடுவதை பார்க்க நான் விரும்பவில்லை. அவர்கள் நன்றாக வாழ வேண்டும் அதற்காகத்தான். இவ்வாறு கூறியுள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
11-பிப்-202016:57:50 IST Report Abuse
dandy இங்குள்ள போலி சூப்பர் ஸ்டார் எவ்வளவு கொடுப்பார் வேம்பு கஷாய கோலா தயாரிக்க ....டாஸ்மாக் நாட்டில் AIDE வியாதிக்கு கூட மருந்து கிடைக்கவும் ஹி ஹி ஹி ...குடிசை கடைகளில்
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
11-பிப்-202014:23:09 IST Report Abuse
oce கோரோனாவை கண்டுபிடித்தவரே அதனை அழிக்கும் மருந்தையும் வைத்திருப்பார். அவரை தேடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
11-பிப்-202014:00:21 IST Report Abuse
oce கற்பூர வல்லி தும்பை இலை நீர்க்கோர்வை கபம் சளி விக்ஷக்கடிகள் கப தோஷம் தலைவலி முதலியவைகளுக்கு ஏற்ற பமருந்து. கொரோனா என்ற கிருமிகள் நீர்வழியில் தோன்றுவனவாக தெரிகிறது. உலகின் கழிவுப்பொருட்களை கடலில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X