இந்தியா உதவியுடன் நேபாளத்தில் புதிய பள்ளிக் கட்டடங்கள் திறப்பு

Updated : பிப் 10, 2020 | Added : பிப் 10, 2020 | கருத்துகள் (1)
Advertisement

காத்மண்டு: நேபாளத்தில் பூகம்பத்தில் சேதமடைந்த பள்ளி கட்டடங்களை மறுகட்டுமானம் செய்ய இந்தியா ரூ.3.9 கோடி நிதி அளித்துள்ளது. அந்த நிதியில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்கள் இன்று(பிப்.,10) திறக்கப்பட்டது.






கடந்த 2015 ல் நேபாளத்தில் 8.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது நேபாளத்தையே புரட்டிபோட்டது. இதில் சுமார் 9 ஆயிரம் பேர் பலியாகினர். 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். ஏராளமான கட்டிடங்கள் மண்ணோடு மண்ணாணது. இடில் ஐசெலுபூம் என்னும் மேல்நிலைப் பள்ளியும் கடுமையாகச் சேதமடைந்தது. இந்தப் பள்ளிக்கட்டிடத்தை மறுகட்டுமானம் செய்ய இந்தியா ரூ.3.9 கோடி நிதியுதவி அளித்தது. இந்த நிதியின் உதவியால் பள்ளிக் கட்டிடம் மீண்டும் சரி செய்யப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்த பள்ளியினை இன்று நேபாள முன்னாள் பிரதமரும் கம்யூனிஸ்ட் கட்சியின் சேர்மனுமான புஷ்ப கமல் தாஹல் பிரசந்தா திறந்து வைத்தார்.





எரிவாயு மற்றும் நீராதாரத்துறை அமைச்சர் பர்சமன் பன் மற்றும் இந்தியாவின் பிரதிநிதியாக சுசித்ரா கிஷோர் என்ற தூதரக அதிகாரி உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்தியாவின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட புதிய கட்டுமானங்களில் 6 வகுப்பறைகள் அடங்கிய 3 மாடி அகாடமிக் கட்டிடம், 4 வகுப்பறைகள் அடங்கிய 2 மாடிக் கட்டிடம் ஆகியவை திறக்கப்பட்டன, தனித்தனியான பர்னிச்சர்கள், மாணவர், மாணவிகளுக்கு தனித்தனியே கழிப்பறை வசதிகள் ஆகியவை இதில் அடங்கும்.

மேலும் 1990ம் ஆண்டு உருவான ஐசெல்பூம் மேனிலைப் பள்ளி நேபாளத்தின் தேசிய தேர்வு வாரியத்தைச் சேர்ந்தது. இங்கு சுமார் 637 மாணவர்கள் பயின்று வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
11-பிப்-202013:42:27 IST Report Abuse
Nallavan Nallavan மோதியின் அலட்சியத்தால் நேபாள் சீனாவின் கைக்குள் போய்விட்டது (அவர்கள் இலங்கைக்கும் அப்படித்தான் சொல்கிறார்கள்) என்று கருத்துக்கூறியவர்கள் இந்தச் செய்திக்கு ஏன் கருத்தெழுதவில்லை ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X