சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

டவுட் தனபாலு

Added : பிப் 10, 2020
Advertisement
டவுட் தனபாலு

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: கடலுார் மாவட்டத்தில், 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் பெட்ரோலிய ஆலை அமைக்க, அமெரிக்க நிறுவனத்துடன், தமிழக அரசு பேச்சு நடத்தியுள்ளது. இந்த ஆலையால், நன்மைகளை விட, தீமைகள் தான் அதிகம். எனவே, அந்த ஆலை இங்கே அமையக் கூடாது.

'டவுட்' தனபாலு: நேர்மையாக சிந்தித்து வந்த நீங்களும், போர்வையாளர்கள் போல மாறி விட்டீர்களோ என்ற, 'டவுட்' இதன் மூலம் ஏற்படுகிறது. பெரிய ஆலைகள் வந்தால் தான், நிறைய பேருக்கு வேலை வழங்க முடியும். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால், மக்களை அவர்கள் துாண்டி விடுவதால், பெரிய திட்டங்கள் பல, தமிழகத்தில் செயல்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால், மாநிலம் பாதிக்கப்படுமே என்ற கவலை, உங்களுக்கெல்லாம் இல்லையோ என்ற டவுட், வலுவாக ஏற்படுகிறதே!
தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: முஸ்லிம் தலைவர்களை சந்தித்த முதல்வர், இ.பி.எஸ்., 'நான் பிறந்த இடம், தேதிக்கான சான்றிதழ் இருக்கிறதா என்பது தெரியவில்லை. மத்திய அரசின் சட்டத்தால், எனக்கே ஆபத்து வரும் போலிருக்கிறது' என கூறியுள்ளார். அவருக்கு மட்டுமல்ல, திடீரென பேட்டி கொடுக்கக் கூடியவர் களின் பெற்றோர் பிறந்த இடம், தேதியும் கூட சரியாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

'டவுட்' தனபாலு: இப்படி பொருந்தாத விஷயங்களை கூறி, எத்தனை காலம் தான், அப்பாவி மக்களை திசை திருப்புவீர்களோ தெரியவில்லை. இப்படி சொல்லியிருப்பதன் மூலம், முதல்வர், இ.பி.எஸ்., கூட, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இருக்கிறார் என்பதை சொல்ல முற்படுகிறீர்கள் என்பது, 'டவுட்' இல்லாமல் தெரிகிறது. அதுபோல, திடீரென பேட்டி கொடுக்கக் கூடியவர் என சொல்லியுள்ளது, நடிகர் ரஜினியைத் தான் என்பதும் தெளிவாக புலனாகிறதே!
தி.மு.க., முதன்மை செயலர் நேரு: காவிரி டெல்டா விவசாயிகளின் நலனில் அக்கறை இருப்பது போல, முதல்வர் இ.பி.எஸ்., நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். உண்மையிலேயே அவருக்கு அக்கறை இருக்குமானால், டெல்டா பகுதிகளில்,, 'ஹைட்ரோ கார்பன்' திட்டங்களை செயல்படுத்த மாட்டோம் என, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றட்டும் பார்க்கலாம்.

'டவுட்' தனபாலு: இல்லாத ஊருக்கு வழி சொல்வது போல உள்ளது, உங்களின் பேச்சு. காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்க வேண்டும் என, இத்தனை நாட்களாக, தி.மு.க., உட்பட பலர் கோரி வந்தனர். அதை ஏற்று, வேளாண் மண்டலமாக, முதல்வர் அறிவித்துள்ளார். இப்போது, 'சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்று' என கூறுவது, விதண்டாவாதம் என்பது, 'டவுட்' இல்லாமல், தமிழக மக்களுக்கு புரிகிறதே!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X