சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : பிப் 10, 2020
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'ஆனால், தமிழகத்தில், ஆங்கிலம் மற்றும் தமிழ் என, இரு மொழி கொள்கை தானே பின்பற்றப்படுகிறது...' என, கூறத் தோன்றும் வகையில், வி.ஐ.டி., வேந்தர் விஸ்வநாதன் பேச்சு:

நம் நாட்டில், அங்கீகரிக்கப்பட்டுள்ள தேசிய மொழிகளாக, 22 மொழிகள் உள்ளன. எனினும், நம்மை ஒன்றாக இணைப்பது ஆங்கிலம் தான். மாநிலத்தில் மும்மொழி கொள்கை வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. இன்னும் நிறைவேறவில்லை. பார்லிமென்டில் தான், இனிமேல் இதை கேட்க வேண்டும்.

'ஒவ்வொரு துறையினரும் இப்படித் தான் சொல்லிக் கொள்கின்றனர்; ஈடுபாட்டோடு உழைத்தால், இந்த குறைபாடு தெரியாது...' என, சொல்லத் தோன்றும் வகையில், தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் தலைவர் ஆர்.கே.அகர்வால் பேச்சு:

சமூகத்தில் ஒரு சில துறைகளில் பணியாற்றுவது எளிதான காரியம். மிக கடினமான சூழல்களையும், சவால்களையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் அந்த துறைகளில் இருக்கும். குறிப்பாக, மருத்துவம் மற்றும் நீதித்துறைகள் அதில் முதன்மையானவை.

'இந்த உண்மை தெரியாமல், இங்கிருக்கும் எதிர்க்கட்சியினர் பலர், விதண்டாவாதம் பேசி வருகின்றனர்...' என, கண்டிக்கத் தோன்றும் வகையில், மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி பேட்டி:

குடியுரிமை திருத்த சட்டத்தில், முஸ்லிம்களையும் சேர்க்க வேண்டும் என, இங்கிருக்கும் எதிர்க்கட்சிகள் பல கோரிக்கை விடுக்கின்றன. அவ்வாறு, முஸ்லிம்களை சேர்த்தால், அண்டை நாடான வங்கதேசத்தில் பாதி காலியாகி, இந்தியாவுக்கு வந்து விடுவர்.

'இதெல்லாம், தேர்தல் கோஷங்கள். உண்மையாக, மக்களுக்காக பாடுபடுங்கள்...' என, பதிலளிக்கும் வகையில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேச்சு:

'மக்களுக்காக நான்' என, ஜெ., வாழ்ந்து வந்தார். அவர் வழியிலான எங்கள் அரசு, 'மக்களுக்காக நாம்; மக்களால் நாம்' என்ற உறுதியில் செயல்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும், 11 மருத்துவக் கல்லுாரிகளை எங்கள் அரசு கொண்டு வந்துள்ளது.

'பழம்பெருமை பேசி என்ன பயன் கண்டோம்; இப்போதைய சமுதாயம் உயர்ந்த நிலையை அடைய அனைவரும் பாடுபட வேண்டும்...' என, பதிலடி கொடுக்க வைக்கும் வகையில், உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் பேச்சு:

மதுரை அருகே கீழடியில் நடைபெற்ற அகழ்வாய்வின் மூலம் நாம் அறிந்த உண்மைகள் பல. சங்க காலத்திற்கு முந்தையது, நம் தமிழர் நாகரிகம் என்பது அதில் ஒன்று. மேலும், அந்த கால தமிழ் சமூகம், சிறப்பான மொழியறிவு பெற்றிருந்ததையும் அறிய முடிகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு பேட்டி: இலங்கை தமிழர் விவகாரத்தில், மத்திய மாநில அரசுகள் பாரபட்சமாக நடக்கின்றன. குடியுரிமை திருத்த சட்டத்தில், இலங்கை தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை கிடையாது; இலங்கை பிரதமர் இங்கு வந்து செல்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X