சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'பெரிய உண்மையை கார்த்தி மறைச்சிருக்காரு!'

Added : பிப் 10, 2020
Advertisement
 'பெரிய உண்மையை கார்த்தி மறைச்சிருக்காரு!'

சென்னை விமான நிலையத்திற்கு, அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் எம்.பி., வந்தார். அப்போது நிருபர்களிடம் அவர், 'வருமான வரி சோதனை நடத்துவது நாடகம். வரி கட்டவிலை என, நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் கேட்கலாம். சமூகத்தில் உயர்ந்த இடத்தில் உள்ளோரின் வீடுகளில், 'ரெய்டு' நடத்துவதும், நாடகம் தான்.

'கருத்து கணிப்புகளை வைத்து, தேர்தல் முடிவுகளை சொல்ல முடியாது. கருத்து கணிப்புகள் எல்லாம், ஒரே முடிவை தான் சொல்கின்றன. மஹாராஷ்டிராவில், காங்கிரஸ் நன்றாக இருந்தது. கூட்டணியில், சிவசேனா கட்சியுடன் இடம் பெற முடிந்தது. ஒரு மாநிலத்தில் ஜெயிப்பதும், ஒரு மாநிலத்தில் தோற்பதும், தேசிய கட்சிகளுக்கு வாடிக்கை' என்றார். மூத்த நிருபர் ஒருவர், 'நடிகர் விஐய் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியது நாடகம்னு, மறைமுகமா கார்த்தி சொல்றாரே... இவர் வீட்டுல நடந்ததும் நாடகம் தானா... அப்ப, ஏதோ பெரிய உண்மையை இவர் மறைச்சிருக்காரு...' எனச் சொல்ல, மற்ற நிருபர்கள், கமுக்கமாக வாய் பொத்திச் சிரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X