சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

அடாவடி போலீஸ் அதிகாரிகளால் அச்சப்படும் மக்கள்!

Added : பிப் 10, 2020 | கருத்துகள் (1)
Advertisement
அடாவடி போலீஸ் அதிகாரிகளால் அச்சப்படும் மக்கள்!

''போலி ஆவண மோசடியில சிக்குவாங்கன்னு சொல்றாங்க...'' என்றபடியே, பெஞ்சுக்கு வந்தார், அந்தோணிசாமி.

''யாரைச் சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''சென்னையில ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்துல, கோவில் கட்டுறது சம்பந்தமா, சிலர் கோர்ட்டுக்கு போயிட்டாங்க... கோர்ட், 'குடியிருப்புக்கு பணி நிறைவு சான்றிதழ் குடுத்தாச்சா'ன்னு கேள்வி எழுப்பி, சி.எம்.டி.ஏ., தரப்புல பதில் தர உத்தரவு போட்டதுங்க...''பதில் மனு தயாரிக்கிறப்ப, சி.எம்.டி.ஏ., கம்ப்யூட்டர்ல தேடிப் பார்த்தா, பணி நிறைவு சான்று கொடுத்ததுக்கான ஆதாரம் இல்லை... ''அதே நேரம், பதிவேட்டுல, சம்பந்தமே இல்லாம ஒரு வரிசை எண்ணை போட்டு, பணி நிறைவு சான்று குடுத்துட்டதா, பதிவு பண்ணியிருக்காங்க...''விஜிலென்ஸ் தரப்பு விசாரிச்சா, பெரிய மோசடிகள் வெளிவரும்னு, சி.எம்.டி.ஏ., வட்டாரத்துல பேசிக்கிறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''கொள்முதல் நிலையங்கள் திறப்புலயும், 'கோல்மால்' பண்ணுதாவ வே...'' என, அடுத்த மேட்டருக்கு நகர்ந்தார், அண்ணாச்சி.

''எந்த ஊருலங்க இந்த விவகாரம்...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''மதுரை மாவட்டத்துல, நெல் சாகுபடி அமோகமா நடந்து, அறுவடையும் சுறுசுறுப்பா நடந்துட்டு இருக்கு... ஆனா, மாவட்ட நிர்வாகம், நெல் கொள்முதல் நிலையங்களை திறக்காமலே இருந்துட்டு வே...''விவசாயிகள் போராட்டத்துல குதிக்க தயாரானதும் தான், கொள்முதல் நிலையங்களை திறக்க ஆரம்பிச்சாவ... அதுலயும், விவசாய சங்கங்களுக்கு தான், மையங்களை திறக்க அனுமதி தரணும்...''ஆனா, அந்தந்த பகுதி, ஆளுங்கட்சி, எம்.எல்.ஏ.,க்கள், தங்களுக்கு வேண்டியவங்களுக்கு மையங்களை திறக்க, அனுமதி வாங்கி தந்திருக்காவ வே... ''இதனால, கோபமான விவசாயிகள், மதுரை நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துனாவ வே... ஆனாலும், ஆளுங்கட்சியினரை மீறி, அதிகாரிகளால எதுவும் செய்ய முடியலை...'' என்றார் அண்ணாச்சி.

''இருவர் கூட்டணியை பார்த்து, எல்லாரும் பயப்படறா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் குப்பண்ணா.
''யாரு வே அவங்க...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''விழுப்புரம் தாலுகா போலீஸ் ஸ்டேஷன்ல ரெண்டு போலீஸ் அதிகாரிகள், புகார் தர வர அப்பாவிகளை ஒருமையில திட்டறது, அடாவடியா பேசறதுன்னு அழிச்சாட்டியம் பண்றா...''சமீபத்துல ஒரு பெற்றோர், தன் மகன் சாவுல மர்மம் இருக்குன்னு புகார் தர வந்தா ஓய்... அவாளை தரக்குறைவா திட்டவே, நொந்து போன அவா, உறவினர்களோட மறியல்ல இறங்கிட்டா... அவாளையும் தாறுமாறா திட்டின அதிகாரி, பெற்றோரை, 'தரதர'ன்னு இழுத்துட்டு போயிருக்கார் ஓய்...''இன்னொரு அதிகாரி, ரோந்து போய், சாராயம் கடத்தறவா, மணல் கடத்தறவாளிடம் ஓடி ஓடி மாமூல் வசூலிக்கறார்... லாரிகள்ல மணல் கடத்தறவாளை விட்டுட்டு, மாட்டு வண்டிகள்ல மணல் கடத்தறவாளை பிடிச்சு, கேஸ் போட்டுப்டறார்... இவா ரெண்டு பேரையும் பார்த்தாலே, பொதுமக்கள், போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவே பயப்படறா ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''பிரபு, பிரகாஷ் வந்தா, வீட்டு பக்கம் வர சொல்லும் நாயர்...'' என்றபடியே அண்ணாச்சி கிளம்ப, மற்றவர்களும் எழுந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
11-பிப்-202006:27:40 IST Report Abuse
D.Ambujavalli இது மட்டுமா? எத்தனை அடுக்கு மாடி காம்ப்ளெக்ஸுகளுக்கு சான்றிதழ் இல்லாமலே இருப்பது முப்பது ஆண்டுகள் கூட ஒப்படைத்துள்ளனர். பில்டர்களோ முகவரிகூட இல்லாமல் மறைந்திருப்பார்கள் வாங்கிவிட்டு தடுமாறும் அப்பாவி ஏமாளிகள்தான் தெருவில் நிற்பார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X