சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

அதிசய அரசியல்வாதி!

Added : பிப் 10, 2020
Share
Advertisement
 அதிசய அரசியல்வாதி!

டில்லியில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடுமையான குளிர் நிலவுவது வழக்கம். குளிரை சமாளிக்க, அங்கு வசிப்பவர்கள், ஸ்வெட்டர், அதற்கு மேல் சட்டை, அதற்கு மேல் கோட் அணிவர். அரசியல்வாதிகளை பற்றி கேட்கவே வேண்டாம். அமைச்சர்கள், எம்.பி.,க்கள் உள்ளிட்டோர், விலை உயர்ந்த ஸ்வெட்டர்களை அணிந்து, அதற்கு மேல், குளிரை தாங்கும் சால்வையும் அணிவர். பார்லிமென்ட் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கும் ஸ்வெட்டர் அணியாமல் வருவது இல்லை.

தென் மாநிலங்களைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள், இந்த விஷயத்தில் விதி விலக்காக உள்ளனர். தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகள், டில்லியில் இருக்கும்போது, பெரும்பாலும் வேட்டி, சட்டை தான் அணிகின்றனர். சமீபத்தில், டில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். இவர்களில் பெரும்பாலானோர், ஸ்வெட்டர், சால்வை அணிந்திருந்தனர். ஆனால், கேரளாவைச் சேர்ந்தவரும், வெளியுறவுத் துறை இணை அமைச்சருமான முரளீதரன், வேட்டி, சட்டையில் எளிமையாக வந்திருந்தார்.

அவரை பார்த்து ஆச்சரியப்பட்ட பார்வையாளர்கள், 'உங்களுக்கு குளிரடிக்காதா... ஸ்வெட்டர் அணியாமல் வந்துள்ளீர்களே' என, கேட்டனர். அவரோ, 'எனக்கு அது சரியா வராதுங்க... வேட்டி, சட்டை தான் வசதியா இருக்கு' என, சிரித்தபடியே கூறினார். பார்வையாளர்களோ, 'அதிசயமான அரசியல்வாதியாகத் தான் இருக்கிறார்' என, முணு முணுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X