முன்னாள் மாணவர்கள் சந்திப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

Added : பிப் 10, 2020
Share

திண்டிவனம் : திண்டிவனம் சாணக்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

பள்ளியில், கடந்த 2015-16ம் கல்வியாண்டில் பங்கு பெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தாளாளர் தேவராஜ் தலைமை தாங்கினார். பள்ளியின் துணைத்தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் அருள் வரவேற்றார். விழாவில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கினர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் யுவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். மாணவி மகாலட்சுமி நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X