பொது செய்தி

தமிழ்நாடு

ரயில்வே பென்ஷனர்கள் சங்க மகா சபை கூட்டம்

Added : பிப் 10, 2020
Advertisement

விழுப்புரம் : தெற்கு இந்திய ரயில்வே பென்ஷனர்கள் அசோசியேஷன் விழுப்புரம் கிளையின் 41வது ஆண்டு பொது மகாசபை கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு, அசோசியேஷன் தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மூத்த தலைவர்கள் பால்ராஜ், காளிமுத்து, உதவி பொருளாளர் பலராமன், உதவி செயலர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். இணைச் செயலர் தேவராஜ் வரவேற்றார். செயலர் பாஸ்கரன் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் பாலசுப்ரமணியன் வரவு செலவு கணக்கு குறித்தும், இணைச் செயலர் பிரான்சிஸ் தீர்மானங்கள் பற்றியும் கூறினர்.தலைவர் வெங்கடாச்சாரி, பொதுச் செயலர்கள் பாலசுப்ரமணியன், கிருஷ்ணமூர்த்தி, மின்வாரிய ஓய்வூதியர் முன்னேற்ற சங்க மாநில இணைச் செயலர் பாண்டியன், காமராஜ் நகராட்சி மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பாலு சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில், திருத்தப்பட்ட ஏழாவது ஊதியக்குழு தபால் அலுவலகம் மூலம் ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்கப்படவில்லை. இதை உடனடியாக வழங்க வேண்டும். கருணை பென்ஷன் பெறுவோருக்கு, ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.விழுப்புரம் ரயில்வே மருத்துவமனைக்கு உரிய அடிப்படை வசதிகளை செய்து சிறப்பு டாக்டர்களை நியமித்தல் மட்டுமின்றி, மருத்துவமனை தரத்தையும் உயர்த்த வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X