உலகிலேயே அதிவேகமாக பறந்து பிரிட்டிஷ் விமானம் சாதனை

Updated : பிப் 10, 2020 | Added : பிப் 10, 2020 | கருத்துகள் (3)
Advertisement

லண்டன்: உலகிலேய அதிவேகமாக பறந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சாதனை படைத்துள்ளது.






அமெரிக்காவின் நியூயார்க் நகரின் ஜான் எப்., கென்னடி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ்க்கு சொந்த போயிங் 747 விமானம் மணிக்கு 1290 கி.மீ., வேகத்தில் பறந்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை, 5 ஆயிரத்து 600 கி.மீட்டர் தூரத்தை 4 மணி 56 நிமிடங்களில் அடைந்தது. இதற்கு அடுத்தபடியாக விர்ஜின் அட்லாண்டிக் ஏர்பஸ் விமானம் ஒன்று ஒரு நிமிடம் தாமதமாக லண்டன் விமான நிலையத்தை அடைந்தது.





இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளை தற்போது கடும் புயல் ஒன்று மிரட்டி வருகிறது. இப்புயலின் பிடியிலிருந்து தப்பிக்கவே பிரிட்டிஷ் ஏர்வேஸ் லண்டனுக்கு அதி வேகமாக விமானத்தை இயக்கி உள்ளதாக தெரிகிறது. இதற்கு முன் சாதனையாக நியூயார்க்கிலிருந்து லண்டனுக்கு 5 மணி 13 நிமிடங்களில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் பறந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
16-பிப்-202014:53:16 IST Report Abuse
Pannadai Pandian இது ஆபத்து…..ஆபத்தோடு விளையாடுகிறார்கள்….
Rate this:
Share this comment
Cancel
Krishna - bangalore,இந்தியா
11-பிப்-202008:07:39 IST Report Abuse
Krishna Speed Thrills But Kills-Here Speed May Cause Instabilty in Air-Turbulent Areas & Playing With Human Lives
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
11-பிப்-202005:12:26 IST Report Abuse
Sanny பணத்துக்காக அவசரப்பட்டு இவ்வளவு அதிவேகம் தேவை இல்லை புகழுக்கு சாதனைக்கு இந்த அதிவேகத்தில் மனித உயிர்கள் சாக தேவை இல்லை. முன்பு சூப்பர் சோனிக்க் விமானம் எரிந்து பல பிரபலங்கள் கருகிப்போனார்கள். டைட்டானிக் கப்பல் சீக்கிரம் போகணும் என்று வேகத்தை கூட்டியதால் பனிப்பாறையில் மோதி பல ஆயிரம் உயிர்கள் மூழ்கிப்போனது. இருப்பதே போதும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X