அரசியல் செய்தி

தமிழ்நாடு

பட்ஜெட்டில் உணவு மானியம் ரூ.7,000 கோடி கிடைக்குமா?

Added : பிப் 10, 2020 | கருத்துகள் (1)
Advertisement

ரேஷனில் வழங்கப்படும், மானிய விலை உணவு பொருட்களுக்காக, பட்ஜெட்டில், 6,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கும்படி, தமிழக அரசை, உணவுத்துறை வலியுறுத்தி உள்ளது.

குறைந்த விலைதமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, பாமாயில் உள்ளிட்டவை குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன.அரிசி, கோதுமையை, இந்திய உணவு கழகத்திடம் இருந்து குறைந்த விலையிலும், மற்ற பொருட்களை, தனியாரிடம் இருந்து சந்தை விலைக்கும், நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்கிறது. இதற்காக, தமிழக அரசு, பட்ஜெட்டில் ஆண்டுதோறும், 6,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறது. சர்க்கரை கார்டுதாரர்களுக்கு, ரேஷனில், இலவச அரிசி வழங்கப்படாமல் இருந்தது.

அவர்களும் இலவச அரிசி வாங்கி கொள்ளும் வகையில், 5 லட்சம் சர்க்கரை கார்டுகள், சமீபத்தில், அரிசி கார்டுகளாக மாற்றப்பட்டன.புதிய ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால், ரேஷன் பொருட்களுக்கான செலவு அதிகரித்துள்ளது. வலியுறுத்தல்எனவே, விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள, தமிழக அரசின் பட்ஜெட்டில், உணவு மானியத்திற்கு, 7,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்குமாறு, அரசை உணவுத்துறை வலியுறுத்த உள்ளது.

உணவுத்துறையின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு உணவு மானியமாக, 6,500 கோடி ரூபாய் ஒதுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
11-பிப்-202015:26:21 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan எங்கள் கிராமத்தில் ரேஷனில் அரிசி வாங்கி மாட்டுக்கும் கோழிக்கும் போடுகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X