அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேப்பனஹள்ளியில் போட்டியிட ரஜினி திட்டம்? திமுக கலக்கம்; ரசிகர்கள் 'குஷி'

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 10, 2020 | கருத்துகள் (163)
Advertisement
Rajini,rajinikanth,politics,dmk,ரஜினி,திமுக

வரும் பொதுத்தேர்தலில், தான் போட்டியிடுவதற்காக, வேப்பன ஹள்ளி சட்டபை தொகுதியை, ரஜினி குறிவைத்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

கடந்த, 2017 டிசம்பரில், ''நான், அரசியலுக்கு வருவது உறுதி. வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடு வோம்,'' என, நடிகர் ரஜினி தெரிவித்தார்.நடிகர் ரஜினி, மக்கள் மன்றத்தை துவக்கி, லட்சக்கணக்கான உறுப்பினர்களை சேர்த்து, கட்சிக்கான உட்கட்டமைப்பு பணிகளை, வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார். மாநாடுகட்சி அறிவிப்பு மட்டும், அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியாகாமல் உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல், அடுத்த ஆண்டு மே மாதம் நடக்க உள்ள நிலையில், வரும் தமிழ் புத்தாண்டில், மதுரை அல்லது திருச்சியில் மாநாடு நடத்தி, கட்சியின் பெயர், கொடியை, ரஜினி அறிமுகம் செய்ய உள்ளார் என, தகவல் வெளியாகி உள்ளது. ரஜினி அரசியலுக்கு வந்தால், எந்த தொகுதியில் அவர் போட்டியிடுவார் என, கேள்வி எழுந்துள்ளது.

சமீபத்தில் வெளியான, தர்பார் படத்தின் ஒரு காட்சியில், 'என் சொந்த ஊர், கிருஷ்ணகிரி மாவட்டம், நாச்சிக்குப்பம்' என, ரஜினி கூறும் காட்சி இடம் பெற்றிருந்தது. கிருஷ்ண கிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதிக்குள் தான், நாச்சிக்குப்பம் கிராமம் வருகிறது. இங்கு, கன்னடம் பேசும் மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.


வெற்றி நிச்சயம்


அதனால், வேப்பன ஹள்ளி தொகுதியில் ரஜினி போட்டியிட்டால், கடும் போட்டியின்றி வெற்றி பெற்று விடுவார் என, அவரின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதை கருதியே, மக்கள் மன்றத்தினர், இத்தொகுதியில், ஏரி துார் வாருவது, நலத்திட்ட உதவிகளை வழங்குவது போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணராவ், அடிக்கடி வேப்பனஹள்ளிக்கு சென்று, மக்களைசந்தித்து வருகிறார். இதனால் வேப்பனஹள்ளி தொகுதியில், ரஜினி போட்டியிடுவார் என, அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.கடந்த, 2011 மற்றும், 2016ல் நடந்த சட்டசபை தேர்தல்களில், வேப்பனஹள்ளி தொகுதியில், தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. அந்த தொகுதியை, ரஜினி குறிவைத்து இருப்பது, தி.மு.க.,வை கலக்கமடைய செய்துள்ளது.

இதைஅடுத்து, தி.மு.க., தலைமை, தன் அரசியல் ஆலோசகர் மூலம், வேப்பனஹள்ளி தொகுதியில், 'சர்வே' எடுத்துள்ளது. அதில், ரஜினியின் வெற்றி வாய்ப்பு குறித்தும், தி.மு.க., வேட்பாளர் குறித்தும், ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (163)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vetri - Chennai,இந்தியா
14-பிப்-202017:16:07 IST Report Abuse
Vetri இவரெல்லாம் அதுக்கு சரி பட மாட்டார்
Rate this:
Share this comment
Cancel
siriyaar - avinashi,இந்தியா
13-பிப்-202016:54:35 IST Report Abuse
siriyaar இது ரஜினி மீது திமுக சொல்லும் கண்ணீர் என்னும் கருத்தை பலப்படுத்தும் இதை ரஜினி தவிர்க்க வேண்டும். தைரியமாக ஸ்டாலின் நிற்கும் தொகுதியில் எதிர்த்து நிற்க வேண்டும் அல்லது திருவாரூரில் நிற்க வேண்டும். அதுவே ரஜினியின் இமேஜ் கூட உதவும்
Rate this:
Share this comment
Anvardeen - chennai,இந்தியா
14-பிப்-202021:42:51 IST Report Abuse
Anvardeenஅப்போ சுடாலின் 5 இடத்துல நிப்பாப்புல ...தேவை பட்டால் போய் ரஜினி காலில் விழுவாப்புல்லே .. பரவா இல்லையா .. எப்படி பார்த்தாலும் சுடாப்களின் துணை முதல்வர்க்கூட ஆக மாட்டப்புல .. எங்கள் டாடி பெஸ்ட் ன்னு கிடைக்கிற மேடையில் எல்லாம் புலம்ப வேண்டியது தான்...
Rate this:
Share this comment
Cancel
Rajan - Alloliya ,இந்தியா
12-பிப்-202018:19:43 IST Report Abuse
Rajan ரஜினின்னு சொன்னாலே சூசைக்கு பேதி ஆகுதுப்பா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X