சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செய்யது அலி மீது பாய்ந்தது, '‛உபா'

Added : பிப் 10, 2020
Advertisement

நாகர்கோவில் : வில்சன் எஸ்.ஐ. கொலை வழக்கில் கைதான செய்யது அலி மீது, சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு பிரிவான, 'உபா' சட்டம் பாய்ந்தது.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனை சாவடியில், கடந்த மாதம், 8ம் தேதி, எஸ்.ஐ., வில்சன், 57, என்பவர், பயங்கரவாதிகளால், சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வழக்கில், பயங்கரவாதிகள் அப்துல் ஷமீம், தவுபிக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு உதவியதாக, கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்த செய்யது அலி என்பவரை, போலீசார் கைது செய்தனர். இவர், நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டார். இந்நிலையில், 'உபா' சட்ட பிரிவில், அவர் கைது செய்யப்பட்டார்.


தென்காசியில், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், செய்யது அலி தேடப்பட்டு வந்தார்.வில்சன் கொலை வழக்கில், அவர் கைது செய்யப்பட்டதையடுத்து, தென்காசி இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையிலான போலீசார், நாகர்கோவில் சென்று, செய்யது அலியை, விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X