அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தி.மு.க., விதைத்த பார்த்தீனிய செடிகள்'

Added : பிப் 10, 2020
Advertisement

சென்னை : ''குரூப் - 4 தேர்வு விவகாரத்தில், எதிர்காலத்தில் சிறு தவறும் நிகழாத வகையில், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன,'' என, அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில், அவர் அளித்த பேட்டி:காவிரி டெல்டா மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கும், சிறப்புமிக்க அறிவிப்பை, முதல்வர் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு, பலருக்கு மகிழ்ச்சியை தந்தாலும், தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, வயிற்றில் புளியை கரைக்கிறது.அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய, குரூப் - 4 விவகாரத்தில், அய்யப்பன் என்பவரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்துள்ளனர். அவர் யார் என்றால், தி.மு.க.,வை சேர்ந்த அப்பாவுவின் கூட்டாளி. இதற்கு அப்பாவு, என்ன பதில் சொல்லப் போகிறார்?

இதெல்லாம், தி.மு.க., ஆட்சி காலத்தில் விதைக்கப்பட்ட பார்த்தீனிய செடிகள்; அ.தி.மு.க., ஆட்சியில், களையெடுத்து வருகிறோம். இதுவரை, 35க்கும் மேற்பட்டோர், குரூப் - 4 விவகாரத்தில், கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில், சிறு தவறும் நிகழாத வகையில், 100 சதவீத நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு ஜெயகுமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X