அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல், உட்கட்சி தேர்தல் 17ல் தி.மு.க., - மா.செ.,க்கள் கூட்டம்

Added : பிப் 10, 2020
Advertisement

சென்னை : உள்ளாட்சி தேர்தல், உட்கட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்க, தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில், வரும், 17ல், சென்னையில் நடக்கிறது.

கடந்த டிசம்பரில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. ஒன்பது மாவட்டங்களில் மட்டும், தேர்தல் நடத்தப்படவில்லை. விடுபட்ட மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தவும், சென்னை உள்ளிட்ட, 37 மாவட்டங்களிலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சேர்த்து நடத்தவும், ஆளும் கட்சி திட்டமிட்டுள்ளது.வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில், சட்டசபையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படலாம் என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, அ.தி.மு.க., அலுவலகத்தில், நேற்று உள்ளாட்சி தேர்தல் குறித்தும், கட்சியின் மாவட்ட அமைப்புகளை பிரிப்பது குறித்தும், மாவட்ட நிர்வாகிகளுடன், முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர், ஆலோசனை நடத்தினர். ஆளுங்கட்சியின் ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து, தி.மு.க., சார்பிலும், மாவட்ட செயலர்களிடம், உள்ளாட்சி தேர்தல், உட்கட்சி தேர்தல் குறித்து ஆலோசிக்க, ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

அவரது தலைமையில், 17ம் தேதி, சென்னை, அறிவாலயத்தில், மாவட்ட செயலர்கள் கூட்டம் நடக்கிறது.சமூக நீதிக்கு பாதுகாப்பு!'டுவிட்டர்' பக்கத்தில், ஸ்டாலின் கூறியிருப்பதாவது: மத்தியில், பா.ஜ., அரசு பதவியேற்றதில் இருந்தே, இடஒதுக்கீடு கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. மத்திய அமைச்சர்களும், மத்திய அரசை கட்டுப்படுத்தும் சங்பரிவாரங்களும், இடஒதுக்கீட்டிற்கு எதிராக, தொடர்ந்து தெரிவித்து வரும் கருத்துக்கள், பல்வேறு குழப்பங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் வித்திட்டுள்ளன.

எனவே, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கான இட ஒதுக்கீடு கொள்கையில், எவ்வித குழப்பத்திற்கும் இடமளிக்காமல், சமூக நீதிக்கு சிறிதும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க, மத்திய அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.அ.ம.மு.க.,வினர் இணைப்பு!துாத்துக்குடி தெற்கு மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், ஒன்றிய, அ.தி.மு.க., இளைஞர் அணிச் செயலர் எஸ்.பி.டி.சுந்தரராஜன் தலைமையில், அ.ம.மு.க.,வை சேர்ந்த திருச்செந்துார் ஒன்றிய அவைத் தலைவர் பரிசமுத்து.

நல்லுார் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா பரிசமுத்து, திருச்செந்துார், 1வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் ராமலட்சுமி, நல்லுார் ஊராட்சி அ.ம.மு.க., செயலர் வடிவேல், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வேல்குமார் ஆகியோர், தி.மு.க.,வில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில், துாத்துக்குடி தெற்கு மாவட்ட செயலர் அனிதா ராதாகிருஷ்ணன், மாணவர் அணி துணைச் செயலர் உமரி சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X