அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேளாண் சிறப்பு மண்டலம் ; முதல்வர் அறிவிப்பால் தி.மு.க., அதிர்ச்சி

Added : பிப் 10, 2020 | கருத்துகள் (2)
Advertisement

'காவிரி டெல்டா பகுதிகள், பாதுகாக்கப்பட்ட வேளாண் சிறப்பு மண்டலமாக மாற்றப்படும்' என, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்புக்கு, விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அதேசமயம், அரசியல் ரீதியாக, ஒரே கல்லில், நான்கு மாங்காய்களை, அ.தி.மு.க., அடித்துள்ளதால், தி.மு.க., அதிர்ச்சி அடைந்துள்ளது.


வரவேற்பு


சேலம் மாவட்டம், தலைவாசலில், சர்வதேச கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவ கல்லுாரி அமைப்பதற்கு, நேற்று முன்தினம் அடிக்கல் நாட்டிய, முதல்வர் இ.பி.எஸ்., 'காவிரி டெல்டா பகுதிகள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும்' என, அறிவித்தார். அவரது அறிவிப்பு, காவிரி டெல்டா விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அந்த விழாவில் பேசிய முதல்வர் இ.பி.எஸ்., 'தமிழகத்தில், மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவற்றை கொண்டு வந்தது, தி.மு.க., தான். 'ஆனால், அ.தி.மு.க., அரசு தான் கொண்டு வந்தது என, அவர்கள் போராட்டம் நடத்தி, பிரச்னையை கிளப்புகின்றனர்' என, குற்றம் சாட்டினார். முதல்வர் இ.பி.எஸ்., பேச்சுக்கு பதிலடி தரும் வகையில், தி.மு.க., முதன்மை செயலர் கே.என்.நேரு, நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், 'தி.மு.க., ஆட்சி காலத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டதாக, வீண் பழி சுமத்தி, விளம்பரம் தேடிக் கொள்ள நினைப்பது, வெட்கக்கேடாக இல்லையா' என, கேட்டிருந்தார்.

ஆனால், வேளாண் சிறப்பு மண்டலம் அறிவிப்பை, தி.மு.க., சார்பில் பாராட்டவோ, வரவேற்கவோ முன்வரவில்லை. ஆனால், கூட்டணி கட்சியான, தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி வரவேற்றுள்ளார். அதேபோல், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, த.மா.கா., தலைவர் வாசன், மூத்த துணைத் தலைவர் ஞானதேசிகன் ஆகியோர், முதல்வரை சந்தித்து, நன்றி தெரிவித்தனர். மேலும், மற்றொரு கூட்டணி கட்சியான, பா.ம.க.,வின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், 'காவிரி டெல்டா காப்பாற்றப்பட்டுள்ளது.

விவசாயிகளின் எதிர்காலம் ஒளிமயமாக அமையும்; முதல்வருக்கு பாராட்டுக்கள்' என, கூறியுள்ளார்.விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி.ஆர்.பாண்டியன், 'ஆறுதல் அளிக்கிறது' என்றார். மற்றொரு தலைவரான அய்யாக்கண்ணுவும் வரவேற்றுள்ளார். இப்படி, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் விவசாய சங்கத் தலைவர்களிடம், முதல்வர் அறிவிப்பு பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும், இந்த அறிவிப்பின் வாயிலாக, அரசியல் ரீதியாக, ஒரே கல்லில், நான்கு மாங்காய்களை, முதல்வர் இ.பி.எஸ்., அடித்துள்ளார்.

முதல் மாங்காய்அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள, பா.ம.க., சமீப காலமாக, ரஜினியுடன் கூட்டணி அமைப்பதற்கு, திரைமறைவில், பேச்சு நடத்தி வருகிறது. இதை தடுக்க, பா.ம.க.,வின் கோரிக்கையை ஏற்று, இந்த அறிவிப்பை, அரசு வெளியிட்டுள்ளது. அதனால், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., நீடிக்க வாய்ப்பு உள்ளது.இரண்டாவது மாங்காய்காவிரி டெல்டா மாவட்டங்களில், தி.மு.க., ஓட்டு வங்கி கணிசமாக உள்ளது.

மேலும், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன், டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால், அவரது கட்சியினரும், டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளாக இருக்கின்றனர். எனவே, அவர்களின் ஆதரவும், அ.தி.மு.க.,வுக்கு கிடைப்பதால், தினகரனின் கூடாரம் காலியாகும். மூன்றாவது மாங்காய்மத்திய அரசின் திட்டமான, 'ஹைட்ரோ கார்பன்' திட்டங்களை நிறைவேற்ற மாட்டோம் என, முதல்வர் அறிவித்துள்ளதால், பா.ஜ., கட்டுப்பாட்டில், அ.தி.மு.க., அரசு இல்லை என்பதை, மக்களுக்கும், பிற கட்சிகளுக்கும் உணர்த்தியுள்ளனர்.

நான்காவது மாங்காய்அடுத்து நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில், இந்த அறிவிப்பின் எதிரொலியால், அ.தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக, ஆளும் கட்சி நம்புகிறது. இப்படி, வேளாண் மண்டலம் அறிவிப்பு வாயிலாக, ஒரே கல்லில், நான்கு மாங்காய்களை, அ.தி.மு.க., அரசு அடித்துள்ளதால், தி.மு.க., அதிர்ச்சி அடைந்துள்ளதாக, ஆளுங் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
11-பிப்-202020:26:39 IST Report Abuse
RajanRajan அப்போ அந்த திருவாரூர் கட்டுமர சுடலை இப்போ FLAT ஆயிட்டார் போல தெரிகிறதே. இனி எழுந்திருக்க எத்தினி வருஷம் ஆவுமோ. தமிழ் வாழ்க.
Rate this:
Share this comment
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
11-பிப்-202017:34:01 IST Report Abuse
Baskar இது தான் அம்மாவின் ஆட்சி என்பது. கருணாநிதி ஆட்சி என்பது கல்லறையோடு முடிந்து வீட்டது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X