சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாடு மேய்ந்த தகராறு 3 பேர் கைது

Added : பிப் 10, 2020
Advertisement

அவலுார்பேட்டை : வளத்தி அருகே நிலத்தில் மாடு மேய்ந்த தகராறில் இரு தரப்பினரைச் சேர்ந்த 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து 3 பேரை கைது செய்தனர்.

வளத்தி அடுத்த ஆரியபுரவடை கிராமத்தைச் சேர்ந்த அய்யாசாமி மகன் கமலக்கண்ணன், 32; அதே ஊரை சேர்ந்த நடராஜன் மகன் சண்முகம், 39; உறவினர்களான இவர்களுக்குள் நிலம் சம்மந்தமாக முன்விரோதம் உள்ளது.நேற்று முன்தினம் கமலக்கண்ணனின் மாடு சண்முகத்தின் நிலத்தில் மேய்ந்தது. இதனால் ஏற்பட்ட தகராறில், இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதில் காயமடைந்த சண்முகம், 39; நடராஜன், 58; சரவணன், 33; கமலா, 53; ஆகியோர் செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.இது குறித்த புகார்களின் பேரில் இரண்டு தரப்பைச் சேர்ந்த 8 பேர் மீது வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து, சரவணன், 33; கமலக்கண்ணன், 32; மணிகண்டன், 26; ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X