சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடைபயணம் செல்ல முயற்சி பழங்குடியினர்

Added : பிப் 10, 2020
Share
Advertisement

வால்பாறை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வால்பாறையில் இருந்து கோவைக்கு நடைபயணமாக செல்ல முயன்ற பழங்குடியின மக்கள், 185 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம், வால்பாறை, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. வால்பாறை பகுதியில், 13 செட்டில்மென்ட்களில், 1,000துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.இவர்கள், 'வன உரிமை சட்டத்தை அமல்படுத்தி, உடனடியாக பட்டா வழங்க வேண்டும்.அனைத்து செட்டில்மென்ட் பகுதிக்கும், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு நடைபயணம் செல்ல முடிவு செய்தனர்.

நேற்று காலை, வால்பாறை காந்தி சிலை பஸ் ஸ்டாண்டில் இருந்து நடைபயணம் செல்ல பழங்குடியின மக்கள் திரண்டனர். அங்கு வந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது, 'கலெக்டர், டி.எப்.ஓ., வந்து, எங்கள் பிரச்னைக்கு தீர்வு சொல்ல வேண்டும்' எனக் கூறி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, 185 பழங்குடியின மக்களை, போலீசார் கைது செய்தனர்.இவர்களுக்கு ஆதரவாக, வால்பாறை நகர் வியாபாரிகள், இரண்டு மணி நேரம் கடையடைப்பு நடத்தினர்.

துணை இயக்குனர்கள் ஆரோக்கியராஜ் சேவியர் பேச்சு நடத்தினார். 'கோரிக்கைகளுக்கு, 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதியளித்தார். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டு, கைது செய்யப்பட்டோர் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X