சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரத்தில் ஒதுங்கிய 200 கிலோ பீடி இலை

Added : பிப் 10, 2020
Advertisement

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் துறைமுகம் கடற்கரையில், நேற்று, நான்கு மூட்டைகளில் ஒதுங்கிய, 200 கிலோ பீடி இலைகளை, மண்டபம் மிதவை காவல் நிலைய போலீசார் கைப்பற்றி விசாரித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் துறைமுகம் கடற்கரையில், பீடி இலைகள், நான்கு மூட்டைகளில், கரையொதுங்கி கிடப்பதாக, மண்டபம் மிதவை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார், அவற்றை கைப்பற்றி விசாரித்தனர். அதில், 200 கிலோ பீடி இலைகள் இருந்தன.கடந்த, 8ம் தேதி, சிலர், இலங்கைக்கு, கள்ளப்படகில் பீடி இலை மூட்டைகளை கடத்த முயன்றனர். அப்போது, நடுக்கடலில், இந்திய பாதுகாப்பு படை கப்பல் ரோந்து வருவதை கண்ட கடத்தல்காரர்கள், மூட்டைகளை, கடலில் வீசி தப்பினர்.

கடலில் மிதந்த மூட்டைகளை, இந்திய காவல் படை வீரர்கள் மீட்டனர். இதன் மீதியே, நேற்று, ராமேஸ்வரம் கரையில் ஒதுங்கியதாக, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X