அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசின் தொழில் கொள்கை அறிவிக்க அழகிரி கோரிக்கை

Added : பிப் 10, 2020
Advertisement

சென்னை : 'காவிரி டெல்டா மாவட்டங்களில், வேலை வாய்ப்பு வழங்குவதற்கு, தமிழக அரசு எத்தகைய, தொழில் கொள்கையை கொண்டிருக்கிறது என்பதை, உடனே அறிவிக்க வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:காவிரி டெல்டா பகுதிகளை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக, முதல்வர் அறிவிக்கிற அதே நேரத்தில், தமிழக அரசின் தொழில் கொள்கை என்ன என்பது யாருக்கும் தெரியாத, புரியாத, புதிராகவே உள்ளது.தமிழகத்தில், எந்த தொழிலை செய்யலாம்; எந்த தொழிலை செய்யக்கூடாது என்பதில், தெளிவான பார்வை, அணுகுமுறை இல்லை. எந்த தொழில் மக்களை பாதிக்காது என்பதை, தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக, அறிவித்த அதே நேரத்தில், ஆண்டுதோறும், லட்சக்கணக்கான இன்ஜினியரிங் பட்டதாரிகள் படித்து விட்டு, வேலை வாய்ப்பு கோரி நிற்கின்றனர்.

அத்தகைய இளைஞர்களுக்கு, வேலை வாய்ப்பு வழங்குவதற்கு, தமிழக அரசு எத்தகைய தொழில் கொள்கையை கொண்டிருக்கிறது என்பதை, உடனே அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அழகிரி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X